சின்ன வெங்காய சாகுபடி

ராசிபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் முறையான சாகுபடி முறைகளைக் கையாண்டால் அதிக மகசூல் பெறலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகன் விஜயகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 • சின்ன வெங்காயம் நடவு செய்திட ஏக்கருக்கு 1 கிலோ கோ 5, விதை தேவைப்படும்.
 • வளர்ச்சிக்கு ஏற்றவாறு 35 நாளில் இருந்து 40 நாள்களுக்குள் நாற்றுகளை பறித்து நடவு செய்யலாம்.
 • தேவைக்கேற்றவாறு நீளம், 1 மீட்டர் அகலம், 15 செ.மீ உயரமும் உடைய மேட்டுப்பாத்தியை அமைத்து வெங்காயம் நடவு செய்ய வேண்டும்.
 • தொழு எருவை 2.5 சென்ட் நிலத்துக்கு 150 கிலோ வீதம் இட வேண்டும்.
 • ஒரு கிலோ வெங்காய விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனோஸ், பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரில்லம் தலா 4 கிராம் அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 • விதைகளை வரிசையாக 2.5 செ.மீ. இடைவெளியில், 2 செ.மீ. ஆழத்தில் கோடு கிழித்து விதைத்து மணல் கொண்டு விதைகளை மூட வேண்டும்.
 • மண்ணின் மேற்பரப்பு நன்கு நனையும் வரை தண்ணீர் தெளிக்க வேண்டும்.
 • விதை முளைத்து வரும் வரை காய்ந்த வைக்கோலைக் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
 • நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • நாற்றுகள் அழுகுவதைத் தடுக்க லிட்டருக்கு 2 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு கலந்த கலவையைக் கொண்டு நாற்றங்காலை நனைக்க வேண்டும்.
 • நாற்றுகள் நுனி கருகி அல்லது மஞ்சள் நிறமாக இருந்தால் 25-ஆவது நாளில் இருந்து டிஏபி., 1 சதமும், ஒட்டுப்பசை அரை மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
 • நாற்றுகளை பிடுங்கி 6 மணி நேரத்துக்குள் நடவு செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட சாகுபடி பணிகளை மேற்கொண்டால் அதிகளவில் மகசூல் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நன்றி: தினமணி 

Related Posts

சின்ன வெங்காயம் சாகுபடி டிப்ஸ்... சின்ன வெங்காயத்தில் ஏற்படும் இலைப்பேன் தாக்குதலை க...
சின்ன வெங்காயம், எலுமிச்சை சாகுபடி பயிற்சி... பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ்...
சின்ன வெங்காயம் பயிரிட்டால் நல்ல மகசூல்... சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தைப் ப...
இயற்கை முறை வெங்காய சாகுபடி டிப்ஸ்... "வழக்கமான முறையில் வெங்காயம் போடுறப்ப அதிகளவில் பு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *