வெங்காயத்தை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்

வெங்காயத்தை தாக்கும் பூச்சிகள்:


இலைப்பேன்

  • பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
  • இப்பூச்சிகள், இலைகளை சுரண்டி உறிஞ்சும். இதனால் இலைகள் வெண் திட்டுகளாகக் காணப்படும்.
  • இலைகள் நுனியிலிருந்து வாடும்.
  • இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மீதைல் டெமட்டான் 500 மில்லி அல்லது பாஸ்போமிடான் 300 மில்லி தெளிக்கவேண்டும்.
  • அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருங்கி நடுவதையும் தவிர்க்கவேண்டும்.

வெங்காய ஈ

  • சாம்பல் நிற ஈக்கள், மண்ணில் உள்ள இடுக்குகளில் முட்டையிடும்.
  • அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக் குடைந்து தின்று  அழுகச் செய்யும்.
  • இதனைக் கட்டுப்படுத்த மீதைதல் டெமட்டான் 25 இசி 1 மிலி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
  • அல்லது மோனோகுரோட்டோபாஸ் ஒரு மில்லி மருந்துடன் டீப்பால் 0.5 மில்லி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்த கலவையுடன் கலந்து தெளிக்கவேண்டும்.

வெட்டுப்புழு

  • இப்புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போன்று ஆக்கும். வளர்ந்த புழுக்கள் வெங்காயத் தாள்களை வெட்டிச் சேதப்படுத்தும்
  • இதனைக் கட்டுப்படுத்த குளோபைரிபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும்.
  • வரப்பு ஓரங்களில் ஆமணக்கை கவர்ச்சிப்பயிராகப் பயிரிட்டு அதில் காணப்படும் சந்தனப் பொட்டு போன்ற முட்டைக் குவியல்களையும், கூட்டமாகக் காணப்படும்.
  • இளம்புழுக்களையும் சேகரித்து அழிக்கவேண்டும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *