வறட்சியிலும் 2 ஏக்கரில் 15 டன் வெண்டைக்காய்

தமிழகத்தில் பருவமழை கைகொடுக்காததால் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர் குறைந்ததால் ஏராளமான கிணறுகள் வற்றி விட்டன.நெல், வாழை, கரும்புக்கு அதிக நீர் தேவைப்படுவதால் விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் நெடுங்குளம் முன்னோடி விவசாயி டி.பெருமாள், குறைந்த நீரை பயன்படுத்தி வெண்டைக்காய் சாகுபடி செய்கிறார்.அவர் கூறியதாவது:

Courtesy: Dinamalar
  • நெல் சாகுபடியில் கவனம் செலுத்தி வந்தேன். மகாராஷ்டிரா சென்றபோது அங்குள்ள விவசாயிகள் குறைந்த நீரை பயன்படுத்தி வெண்டை, கத்தரி, தக்காளி, பருத்தி சாகுபடியில் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.
  • நெல், கரும்பு, வாழைக்கு ஆகும் செலவை விட காய்கறி சாகுபடியில் இரட்டிப்பு லாபம் இருப்பதை உணர்ந்தேன்.
  • பருவமழைகள் பெய்யாததால் கிணற்றில் சிறிதளவு நீர் மட்டுமே உள்ளது. மகாராஷ்டிரா விவசாயிகள் போல் காய்கறி சாகுபடி செய்ய முடிவு செய்தேன்.
  • இதன்படி 2015ம் ஆண்டு இறுதியில் 2 ஏக்கரில் ‘பேயர் சாம்ராட்’ எனும் வீரிய ஒட்டு ரக வெண்டைக்காய் பயிரிட்டேன். 5 டன் காய்கள் கிடைத்தன. நல்ல லாபம் இருந்தது.
  • 2016 டிச., 24ல் 2 ஏக்கரில் வெண்டைக்காய் பயிரிட்டேன். முன்னதாக இயற்கை உரங்களை நிலத்தில் பரப்பி ஆழமாக உழுதேன்.
  • 40 நாட்களில் முதல் காய்ப்பு கிடைத்தது. காய்கள் நீளமாகவும், தடிமனாகவும், பிஞ்சாகவும், பச்சை நிறத்திலும் இருக்கிறது.
  • காய் பறிப்பு துவக்கம் என்பதால் 250 கிலோ முதல் 300 கிலோ வரை காய்கள் கிடைக்கின்றன.
  • இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காய் பறிக்கப்படுகிறது. தொடர்ந்து 30 முறை காய்கள் பறிக்கலாம்.
  • 2015ம் ஆண்டை போலவே இந்தாண்டும் இரண்டு ஏக்கரில் 15 டன் அளவுக்கு காய்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
  • பூச்சி தாக்குதல் குறைவுமொத்த விலையை கணக்கிட்டால் கிலோ 40 ரூபாய். 6 ஏக்கர் நெல் விவசாயத்தில் கிடைக்கும் லாபம் 2 ஏக்கரில் வெண்டைக்காய் மூலம் கிடைக்கிறது.
  • வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும். குறைந்த நீரில் வறட்சியை தாக்குப்பிடித்து வளரும் காய்கறி ரகங்களை பயிடும்போது நெல் சாகுபடியை விட இதில் லாபம் அதிகம்.
  • தொடர்ந்து 20 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. வயலில் களை இல்லாமல் பார்த்து கொள்கிறேன். இதனால் பூச்சி தாக்குதல் மிகவும் குறைவு, என்றார்.

தொடர்புக்கு ௯௯௪௨௨ ௦௪௯௫௧. – 09942204951

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *