வெண்டை பயிரில் தோன்றும் நோய்கள்

 வெண்டை இலைப்புள்ளி : 

அறிகுறிகள்:

  • இந்தியாவில் 2 வகைகள் இலைப்புள்ளி நோய்கள் இருக்கின்றன
  • செ.மலாயன்ஸிஸ் பழுப்பு நிறத்தில், ஒழுங்கற்ற புள்ளிகளுடனும், செ. ஏபில்மோஸி கரும் புகை பூசணத்துடன், நீளவாக்கில் புள்ளிகளுடனும் காணப்படும்
  • இரண்ட இலைப்புள்ளிகளும் இலை உதிரச் செய்யும். ஈரப்பதம் உள்ள பருவங்களில் பொதுவாகத் தோன்றும்

கட்டுப்பாடு:

  • மான்கோசெப் 0.25% தெளிக்க வேண்டும்.

2.ப்யூசேரியம் வாடல் நோய் : 

அறிகுறிகள்:

  • தனிப்பட்ட வாடல் நோய், மஞ்சளாதல் மற்றும் குட்டை வளர்ச்சி உடைய செடிகளுடன் ஆரம்பித்து, வாடலைத் தொடர்ந்து, இலைகள் சுருண்டு காணப்படும்
  • முடிவில், செடிகள் மடிந்துவிடும்
  • நோய்த்தாக்கப்பட்ட தண்டுப் பகுதியை நீளவாக்கில் வெட்டிப் பார்த்தால், வாஸ்குலர் திசுக்கள் அடர்நிற கோடுகளுடன் காணப்படும்
  • நோய் தீவிரமாக தாக்கப்படும் போது, முழுத் தண்டும் கருப்பாக மாறும்

கட்டுப்பாடு:

  • மான்கோசெப் 3கி / கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% உடன் வயலில் படுமாறு நனைக்க வேண்டும்

3. சாம்பல் நோய் : 

அறிகுறிகள்:

  • வெண்டையில் சாம்பல் நோய் மிக அதிகமாக தென்படும்
  • சாம்பல் கலந்த வெள்ளை நிறப் பொடி போன்ற வளர்ச்சி இலையின் இரண்டு புறமும் தோன்றி, மகசூலை குறைக்கும்

கட்டுப்பாடு:

  • செயற்கை கந்தகம் 0.25% (அ) டைனோகேப் 0.1% 3 (அ) 4 முறை 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்

4. வெண்டையின் நரம்புத் தேமல் (Yellow Vein Mosaic)

  • முதன்முதலாக பம்பாயில் 1940-ல் இந்நோய் தோன்றியது.
  • நாளடைவில் சிறிது சிறிதாகப் பிற மாநிலங்களுக்கும் பரவி வெண்டையின் விளைவைப் பெரிதும் பாதித்த நிற்கின்றது.
  • இதனை நரம்பு வெளுத்தல் (Vein Clearing) நேரய் என்றும் கூறுவதுண்டு.
  • நோய்க்காரணி : வெண்டை மஞ்சள் நரம்புத் தேமல் நச்சுயிரி.
  • ஆரம்பத்தில் இலை ஓரங்களிலிருந்து நரம்பு வெளுத்துக் காணப்படும். நாளடைவில் இலைப் பாகத்திலுள்ள நரம்புகள் கிளைநரம்புகள் யாவும் வெளுத்துத் தோன்றும்.
  • புதிதாகத் தோன்றும் இலைகளிலும் கிளை நரம்புகள் வெளுத்துக் காணப்பட்டு இடைப்பாகம் மட்டும் பசுமையாக இருப்பதால் வலை பின்னப் பட்டிருப்பதை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.
  • நாளடைவில் இலைப்பாகம் முழுவதுமே வெளுத்துத் தோன்றும். இலையின் அடிப்பாகத்திலுள்ள நரம்புகள் பெரியதாயிருக்கும்.
  • ஆயினும் இலைகளிலிருந்து வெளிவளர்ச்சி (Enation) தோன்றாது. வெண்டைக் காய்கள் ஒழுங்கற்ற வடிவத்தைப் பெறுவதுடன் குட்டையாகி வெளுத்துக் காணப்படும்.

    பரவுதல் :

  • பெமிசியா டபாசை என்ற வெள்ளை ஈக்கள் இந்நோயைப் பரப்புகின்றன.
  • இதே நச்சுயிரி, நாய் மிளகாய் (Croton Sparsifirus) ஹைபிஸ்கஸ் டெட்ராபில்லஸ் போன்ற களைகளையும் தாக்குகின்றன.
  • எனவே இக்களைகளிலிருந்து இந்நச்சுயிரி வெண்டை செடிகளுக்கும் பரவும் வாய்ப்புண்டு.

கட்டுப்பாடு

  • நோய்க்கண்ட செடிகளை அப்போதைக்கப்போது களைந்தெறிதல் அவசியம்.
  • இந்நோய் தோன்றும் களைச் செடிகளை அழித்து விடுதல், பூச்சிகளின் நிலத்திற்கருகிலுள்ள பூச்சிகள் தங்கும் களைகளை அழித்து விடுதல், பூச்சிகளின் நிலத்திற்கருகிலுள்ள பூச்சிகள் தங்கும் களைகளை அழித்து விடுதல், பூச்சிகளின் பெருக்கத்தைக் குறைக்கும்.
  • மோனோகுரோட்டோஃபாஸ் 0.1% பூச்சிக் கொல்லியை விதைத்த 25, 35, 45 வது நாட்களில் தெளித்து நோய் பரப்பும் பூச்சிகளை அழித்தல்.

நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *