ஹாலந்து வெள்ளரி

தாண்டிக்குடி மலைப்பகுதியில் வெளிநாட்டு ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹாலந்து வெள்ளரி பசுமைக்குடிலில் விளைவிக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் நிலவும் சீதோஷ்ண நிலை கொய்மலர் உற்பத்திக்கு சிறப்பாக இருக்கிறது. இருந்தபோதிலும் ஆய்வுக்காக பசுமைக்குடிலில் ஹாலாந்து நாட்டு வகையான பீட்-ஆல்பா வகை வெள்ளரியை பயிரிட்டுள்ளனர்.

நடவு செய்த 30 நாளில் பூக்கள் பூக்கும். தொடர்ந்து 45 வது நாள் முதல் காய்கள் அறுவடைக்கு தயாராகி 120 நாட்கள் பலனளிக்கும்.

ஒரு கொடியில் சாரசரியாக 10 கிலோ, காய் கிடைக்கும்.

9286

 

 

 

 

 

ஓராண்டில் 3 முறை மகசூல் செய்து ஒரு மகசூலுக்கு ரூ. 2 லட்சம் செய்து ரூ.3 லட்சம் லாபம் ஈட்டலாம். தரணி பார்ம் நிறுவனர் மனோகரன் கூறியதாவது:

  • இங்கிலீஷ் குக்கும்பர் என அழைக்கப்படும் வெளிநாட்டு ரகம் அதிக மகசூல் தரக்கூடியது.
  • கால் ஏக்கரில் “பாலி ஹவுசி’ல் பயிரிட்டால் அதிகபட்சமாக 25 டன் கிடைக்கும்.
  • விலையை பொறுத்தமட்டில் கிலோ ரூ.20 முதல் 40 வரை கிடைக்கும்.
  • தேங்காய் நார் அமைத்து “குரோ பேக்’ மூலம் விதைகள் நடவு செய்து சொட்டு நீர் பாசனம் மூலம் பராமரிப்பு செய்யப்படுகிறது.
  • தண்ணீர் சத்து நிறைந்தும், நீரில் எளிதில் கலக்கும் நார்சத்தும் அதிகமுள்ளது. இதனால் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் தவிர்க்கப்படுகிறது.
  • ஐரோப்பிய நாடுகளில் இவ்வகைக்கு கிராக்கி உள்ளது. மேலும் சாலட், அழகு சாதன பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுகிறது.
  • பறிக்கப்படும் காய்களை கேரளாவிற்கு சப்ளை செய்கிறோம், என்றார்.

நன்றி: தினமலர்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

லண்டன் வேலையை உதறிவிட்டு விவசாயம் செய்யும் இளைஞர்... லண்டனில் எம்.எஸ் படித்துவிட்டு அங்கேயே கணினிப் பொற...
இயற்கை வழி வெள்ளரி விவசாயம் ‘சாம்பார் வெள்ளரி’ என்றாலே ரசாயன உரம், பூச்சிக்கொல...
வெள்ளரி சாகுபடி வெள்ளரி இரகங்கள் : கோ.1, ஜப்பானி லாங் கிரின், ஸ்ரோ...
25 சென்ட் நிலத்தில் 2 டன் வெள்ளரி சாதனை... மன்னார்குடி அருகே திருக்கொல்லி காட்டை சேர்ந்தவர் ஓ...

One thought on “ஹாலந்து வெள்ளரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *