இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதே சிறந்த வழி!

இயற்கை சார்ந்த உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதே சிறந்த வழிமுறையாகும் என வேளாண் அறிவியல் மைய தலைவர் கூறினார். அரியலூர் மாவட்டம், சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் (CREED KVK)2015-16ம் ஆண்டிற்கான கலந்தாய்வு திட்டமிடல்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றி விரிவாக பேசினார்.

சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தலைவர் நடனசபாபதி தலைமை வகித்து பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் ஒன்றியம் சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் வேளாண்மை பற்றி விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

விவசாய பயிர்களில் எந்த நோய் தாக்குதல் என்றாலும் இம்மையத்தை அணுகி விபரம் கேட்பதற்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இம்மைய வேளாண் தொழில்நுட்ப வல்லுனர்கள் தகுந்த ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று களப்பணி முகாமும், விவசாய ஆய்வுகளும் நடத்தி வருகின்றனர். அரசின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு இங்குள்ள தொழில் நுட்ப வல்லுனர்கள் பங்கேற்று சிறப்பு பயிற்சி வழங்கி வருகின்றனர்.

நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் விதைநேர்த்தி செய்வது அவசியமான ஒன்றாகும். முந்திரியில் தேயிலைக்கொசு, மாவுப்பூச்சி தாக்குதல் ஆகியவற்றை கட்டுப்படுத்த இம்மைய தொழில்நுட்ப வல்லுனர்களை தொடர்பு கொண்டு தகவல் பெறுங்கள்.

பொதுவாக இயற்கை சார்ந்த உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதே சிறந்த வழிமுறையாகும்.  சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம் விவசாயிகளுக்கு உற்ற நண்பனாக இருக்கும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு: CREED கே.வீ.கே
Programme Coordinator
கிரீட் ICAR-Krishi Vigyan Kendra
சோழமாதேவி -போஸ்ட்  612902
வழி ஜெயம்கொண்டான் , உடையார்பாளையம் தாலுக்கா அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு
தொலைபேசி எண்:  : 04331290335
அலைபேசி : 09751280089


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதே சிறந்த வழி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *