கோடை உழவு அவசியம்

களைகள், நோயை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என, வேளாண்மைத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர். அவர்கள் கூறியதாவது:

  • பயிர் அறுவடைக்கு பின் நிலத்தில் ஆழமான வெடிப்புகள் ஏற்பட்டு அடிமண் ஈரம் ஆவியாகிறது. இதனால் சாகுபடி சமயங்களில் மீண்டும் தண்ணீர் பாய்ச்சும்போது அடியில் சென்றுவிடும். மேலும் உழவின்போது வளமான மேல் மண் துகள்கள் வெடிப்புகள் வழியாக அடிமட்டத்திற்கு சென்றுவிடும்.
  • இதனை தடுக்க கோடை உழவு அவசியமாகிறது. இதன்மூலம் அதிக வெடிப்பு ஏற்படாமல் மண் பொல, பொலவென்று இருக்கும். முன்பருவ விதைப்புக்கு உதவுகிறது.
  • அடிமண் ஈரம் நீண்ட நாள் பாதுகாக்கப்படுகிறது.
  • அறுவடைக்குபின் எஞ்சியுள்ள கட்டை பயிர்கள் மண்ணில் மூடப்பட்டு மக்கி விடுகிறது.
  • இதனால் பூச்சி, நோய் தொல்லை குறைகிறது. மேலும் கட்டை பயிர் உரமாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகி மண் வளத்தை அதிகரிக்கிறது.
  • கோடை உழவு நிலத்தின் சரிவுக்கு குறுக்காக உழவு செய்ய வேண்டும்.
  • கோடை உழவு செய்யாவிட்டால் களைகள் அதிகமாகும்.
  • அறுவடைக்கு பின் எஞ்சியுள்ள கட்டைப் பயிர்கள் பூச்சிகள், நோய் கிருமிகளின் உறவிடமாக மாறிவிடும். இதனால் பயிர்களை எளிதல் நோய் தாக்கும், என்றனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *