தானே புயலால் டெல்டா பகுதியில் நெற்பயிர் பாதிப்பு

:”தானே’ புயல் தாக்கியதில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மேட்டூரில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி டெல்டா கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் தாலுகாக்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள்  காலத்தே பயிர் செய்திருந்தனர். அடுத்த சில நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் செழிப்பாக இருந்த நெல் மணிகள் தற்போது ஏற்பட்ட “தானே’ புயலால் மடிந்து வீணானது.
நெல் மணிகள் பூ பிடித்து பால் கட்டும் தருவாயில் புயல் தாக்கி மடிந்ததால் நெல்மணிகள் பதராகும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் மணிகள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அடுத்து போடப்படும் உளுந்தும் வயலுக்கு நேரடியாக போய் சேராது. இதனால் தொடர்ந்து விளைச்சல் பாதிக்கப்படும்.

இதனால் கடந்த ஆண்டு தர வேண்டிய நெல் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசு பேரிடர் மேலாண்மை நிதியாக ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிபந்தனையின்றி அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர் வினாயகமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி: தினமலர்

Related Posts

கோடை உழவு அவசியம் களைகள், நோயை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என, வ...
வேளாண் அறிஞர் தேவிந்தர் சர்மா பேட்டி... எல்லாவற்றையும் நிறுவனமயமாக்கிவிட வேண்டும்... எல்லா...
விவசாய கேட்ஜெட் – ஒரு நாற்று நடவு கருவி!... இது கருவிகளின் (Gadget) காலம். சின்ன சின்னக் கருவி...
கரடு முரடான நிலத்தில் சாதித்த மாற்று திறனாளி விவசாயி!... சிவகங்கை மதகுபட்டி பொன்குண்டுபட்டி அருகே வனப்பகுதி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *