திருச்சியில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு

திருச்சியில் இரண்டு நாட்கள் நடக்கவுள்ள வேளாண் கண்காட்சியில் வட்டார விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும்  என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி நவலூர் குட்டப்பட்டு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஜூலை மாதம் ஒன்று, இரண்டு தேதிகளில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை (ஆத்மா) திட்டத்தின் கீழ் வேளாண்மை கண்காட்சியும் கருத்தரங்கும் நடக்கிறது. வேளாண்மை துறையில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன வேளாண் இயந்திரங்கள், கால்நடை வளர்ப்பு, உள்நாட்டு மீன் வளர்ப்பு, பட்டு வளர்ப்பு குறித்து வேளாண்மை துறை பேராசிரியர்கள், அறிஞர்கள் கருத்துக்களை வழங்கவுள்ளனர்.  இடுபொருட்கள் கண்காட்சியும், விற்பனையும் நடக்கவுள்ளது. விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்படும்.

புதிய ரக பயிர் விதைகள், நவீன வேளாண் இயந்திரங்களும், செம்மை நெல் சாகுபடிக்கு தேவையான மார்க்கர், கோனோ வீடர் கருவிகளும் விற்பனை செய்யப்படவுள்ளனர். கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் விவசாயிகள் பங்கேற்று, வரும் பருவத்தில் புதிய தொழில் நுட்பங்களை கடைபிடித்து, அதிக மகசூலும் வருவாயும் பெற்று பயனடைய வேண்டும் என மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) ரெங்கராஜன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “திருச்சியில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு

  1. IMAYA says:

    Hello admin .. Need help.. I’m new to asolla culture… My culture is growing well but my problem is daily I need to mix the culture orelse more bubbles formed at top with some cow dung .. How to solve this…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *