தேங்காய் பறிக்க, Tractor Hoist இயந்திரம்

விவசாய வேலைகளுக்கு ஆட்கள் குறைந்து வரும் இந்நாட்களில் மரம் ஏறி பழம் பறிப்பது, தேங்காய் பறிப்பது, மரங்களுக்கு பூச்சி மருந்து அடிப்பது போன்றவை கஷ்டமாகி வருகின்றன. மரம் ஏற தெரிந்த வேலையாட்கள் குறைந்து வருவதும் அவர்கள் போவதும் இதற்கு காரணம்.

இந்த பண்ணை வேலைகளை செய்ய இப்போது திருச்சி அருகே உள்ள  கும்லூரில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் சார்ந்த வேளாண்மை பொறியயல் கல்லூரி Tractor மீது வைக்க பட்டு வேலை செய்யும் மேடையை (Multipurpose hoist) வடிவமைத்து உள்ளனர்.

இந்த பொறி உள்ள 45HP tractor மூலம்  இணைக்க பட்டு உள்ளது. இந்த மேடை மீது இரண்டு பேர் நிற்க முடியும். ஹைட்ராலிக் (Hydraulic force) விசை மூலம் இயக்க பட்டு தரை மட்டத்தில் இருந்து 27 அடி வரை மேலே போகும். இந்த மேடை மீது இன்று இரண்டு பேர் காய்களை பறித்து கீழே பாதுகாப்பாக வர முடியும்.

மா, சபோட்டா போன்ற பழங்களை பறிக்க எளிது.

மேலும் விவரங்களுக்கு அணுகவும்:  தாஜுட்டின் மற்றும் தியாகராஜன்,  வேளாண்மை பொறியயல் கல்லூரி, தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம், கும்லூர், திருச்சி

நன்றி: ஹிந்து (ஆங்கிலத்தில்)

Related Posts

புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – கோ – 50... பெயர்: TNAU Rice CO 50சிறப்பியல்கள்:சன்ன அர...
கடனை திருப்பி தராத பணக்காரர்கள்...  விவசாயிகள் வங்கிகளிடம் இருந்து கடன் வாங்...
புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – ஆர் ஓய 3... பெயர்: த வே ப க டி ஆர் ஓய 3 (TRY 3)சிறப்பியல்ப...
பசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிப்போர்க்கு... பசுமை தமிழகத்தை மொபைல் போனில் படிப்போர்க்கு -ந...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *