தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்புப் பயிற்சி 2014 ஏப்.7 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் தேனீ இனங்களை கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் குறித்து பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி நாள் காலை 9 மணிக்குள்ளாக வேளாண் பூச்சியியல் துறைக்கு தங்கள் சொந்த செலவில் வந்து சேரவேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள ரூ.250 நேரடியாக செலுத்த வேண்டும்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பூச்சியியல் துறைத் தலைவரை 04226611214 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்