விவசாயத்தில் குரல்வழி குறுஞ்செய்திகள்

விவசாயிகள் தற்போது பல்வேறு சவால்களை சந்தித்து வரும் சூழ்நிலையில், அவற்றை சமாளிக்க பல்வேறு தகவல்களும், ஆலோசனைகளும் தேவைப்படுகிறது.

அதை நிறைவு செய்யும் வகையில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் குரல்வழி குறுஞ்செய்தி அனுப்பும் திட்டத்தை தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

குரல்வழி செய்தி அனைத்து விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். குரல்வழி செய்தி மூலம் அனுப்பப்படும் வானிலை தகவல்கள் மற்றும் ஆலோசனைகள், மண் மற்றும் பாசனநீர் பரிசோதனை, விதைகள் மற்றும் ரகங்கள் தேர்வு, நவீன தொழில்நுட்பத் தகவல்கள், பயிர் பாதுகாப்பு தகவல்கள், சந்தை நிலவரங்கள், அரசு நலத்திட்டங்கள், பயிர் மேலாண்மை போன்ற தகவல்கள் விவசாய உற்பத்தியை பெருக்க உதவியாய் அமையும்.

இந்த ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ள விவசாய நண்பன் உதவி மையம் விவசாயிகளுக்கு அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க உதவும். எனவே, விவசாயிகள் இத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜ்குமார் பேசும்போது, இந்தத் திட்டத்தின் மூலம் தினமும் 2 குரல்வழி குறுஞ்செய்திகள் பதிவுசெய்த விவசாயிகளுக்கு அனுப்பப்படும்.

விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க விவசாய நண்பன் உதவி மையமும் செயல்படுகிறது.

விவசாயிகள் 09677759545, 09677759549 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமணி

 

பசுமை தமிழகம் மொபைல் ஆப் இங்கே டவுன்லோட் செய்யவும்

Related Posts

இயற்கை முறையில் களைக்கொல்லி கேரளாவில் ஒரு எளிமையான விவசாயி நரேந்திரநாத் என்பவர...
குழித்தட்டு சிறந்த முறை விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற கூற்றுப்படி ...
தானியங்களை பாதுகாக்கும் குதிர்கள்... தானியங்களை பாதுகாக்கும் குதிர்களை பயன்படுத்தும் பழ...
செயற்கை வேளாண்மையே நோய்களுக்கு காரணம்... பல்வேறு நோய்களுக்குச் செயற்கை வேளாண்மையே காரணம...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *