வேளாண் துறையில் மத்திய பிரதேசம் சாதனை

குஜராத் மாநிலத்தில் 2001 முதல் 2011 வரை 10.97%  சதவீதம் ஒவ்வொரு வருடமும் விவசாயம் அதிகரித்து உள்ளது என்பதை படித்தோம். இப்போது மதிய பிரதேசமும் விவசாயத்தில் முன்னேறி வருகிறது.
எல்லா அரசியல் வாதிகளும் தொழில்சாலைகள், IT வேலை வாய்ப்பு என்று பேசும் இந்நாளில் இது ஒரு நல்ல செய்திதான்..

இதோ அதை பற்றி ஹிந்துவில் வந்த ஒரு செய்தி

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம், இது வரை இல்லாத வகையில் வேளாண் துறையில் 25 சதவீத வளர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இது போல் மாநிலத்தின் மொத்த உற் பத்தி மதிப்பும் (ஜிடிபி) 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2013-14 ஆண்டுக்கான உத்தேச வளர்ச்சி வீதங்களை மத்திய புள்ளியியல் துறை (Central Statistical Organization – CSO – சிஎஸ்ஓ) வெளியிட்டுள்ளது. இதில் மத்தியப் பிரதேச மாநிலம் வேளாண் மைத் துறையில் 24.99 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளதாகக் குறிப் பிடப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி கடந்த 2012-13ல் 20.16 சதவீதமாகவும் 2011-12-ல் 19.85 சதவீதமாகவும் இருந்தது. இதற்காக, வேளாண் துறை உற்பத்தி யில் சிறந்து விளங்கும் மாநிலங் களுக்கு மத்திய அரசால் வழங்கப் படும் கிரிஷி கர்மன் விருதை, மத்திய பிரதேச மாநிலம் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004-05-ம் ஆண்டின் வளச்சியை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி கணக்கிடப் படுகிறது. அப்போது, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) வேளாண் துறையின் பங்கு ரூ.31,238.3 கோடியாக இருந் தது. இது 2013-14-ல் ரூ.69,249.89 கோடியாக (121%) அதிகரித்துள்ளது. 2004-05-ல் 73.27 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி, 2013-14-ல் 193 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. சோயா பீன் உற்பத்தி 37.6 லட்சம் டன்னிலி ருந்து 50 லட்சம் டன்னாகவும், அரிசி உற்பத்தி 13.09 லட்சம் டன்னிலி ருந்து 69.5 லடசம் டன்னாகவும் அதிகரித்துள்ளது. சாகுபடி பரப் பளவு 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதுமையான திட்டங்கள்

வட்டியில்லா விவசாயக் கடன், விதை உற்பத்தி கூட்டுவு சங்கங்க ளின் விரிவாக்கம், புதுமையான தொழில்நுட்பம் உள்ளிட்ட பல் வேறு சிறப்பு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தியதே வேளாண் உற்பத்தி அதிகரித்ததற்கு முக்கியக் காரணம்.

மாநிலத்தின் சராசரி தனிநபர் வருமானம் 350 சதவீதம் அதி கரித்துள்ளது. 2004-05-ல் ரூ.15,442 ஆக இருந்த இது, இப்போது ரூ.54,030 ஆக உயர்ந்துள்ளது


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *