கழிவு நீர் கலந்ததால் ஊட்டி எரி படகுகள் நிறுத்தம்

ஊட்டி ஏரியில் கழிவுநீர்கலந்து கடும் துர்நாற்றம் வீசியதால், தேனிலவு படகு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டது.

ஊட்டி ஏரியில்சுற்றுலாத்துறை சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது.இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக வருகிறது. இந்த கால்வாய் நகரின் மையப்பகுதியில் செல்கிறது.கால்வாயின் இருபுறமும் உள்ள ஓட்டல்கள், குடியிருப்பு,லாட்ஜ் உள்ளன.இவைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் கால்வாயில் வந்து ஏாியில் கலப்பதால் ஏாி மாசடைந்து வந்தது.

Courtesy: dinakaran
Courtesy: dinakaran

இதையடுத்து,ஏரியை தூய்மைப்படுத்த கடந்த இரு ஆண்டுக்கு முன் தமிழக அரசு ரூ.4 கோடியே 27 லட்சம் ஒதுக்கியது. இதனைதொடாந்து, கோடப்பமந்து கால்வாய் தூா்வாரப்பட்டது. ஏாியில் கழிவுநீா் கலக்காத வண்ணம் சுத்திகாிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.மேலும், நீரேற்றும் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டன.

இதில், ஏாியில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்பட்டது. ஏாியை தூய்மையாக வைக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டா் தலைமையிலான ஊட்டி ஏாி பாதுகாப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டது். இந்நிலையில் ஊட்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், சேறும் சகதியும் கலந்து நிறம் மாறி காணப்பட்டது. சில இடங்களில் கருமையான நிறத்தில் காணப்பட்டது. ஏாியை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஓட்டல்கள், காட்டேஜ்களில் இருந்து கழிவுநீா் நேரடியாக ஏாியில் திறந்து விடப்பட்டதாலேயே ஏாி நீா் கருப்பு நிறத்திற்கு மாறி கடும் துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழக கோவை மண்டல மேலாளா் சங்கா் தலைமையில் நகராட்சி, மின்வாாியம், மாசு கட்டுபாட்டு வாாிய அதிகாாிகள் நேற்று ஏாி,அருகே உள்ள காட்டேஜ், ஓட்டல்களிலும் ஆய்வு நடத்தினாா–்கள்.அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் கழிவு நீர் நேரடியாக ஏரியில் கலப்பதாலே நிறம் மாறியது மட்டுமின்றி, சுகாதர சீர்கேடு ஏற்பட்டு துர் நாற்றம் வீசியதும் தெரிய வந்தது. எனினும், சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சுற்றுலா வளா்ச்சி கழக மண்டல மேலாளா் சங்கா் கூறுகையில்,‘ ஏாியில் கழிவுநீரை திறந்து விடும் காட்டேஜ்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். ஏாியில் கழிவுநீா் மாசடைந்துள்ளதால், சாியாகும் வரை தேனிலவு படகு இல்லம் மூடப்படும்‘, என்றாா்

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *