"ஆரோக்கிய மகசூலுக்கு இயற்கை விவசாயம்'

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில், பி.ஏ.பி., பாசன விவசாயிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்த வேளாண்மை குறித்த பயிற்சி முகாம், வெள்ளகோவிலில் நேற்று நடந்தது.

பசுமை அறக்கட்டளை தலைவர் யோகநாதன் பேசியதாவது:

  • இயற்கை விவசாயத்தை விடுத்து, ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் மண் வளம் குன்றி வருகிறது.
  • மண் மலட்டு தன்மை ஏற்பட்டு, எதிர்பார்த்த அளவு மகசூல் பெற முடிவதில்லை.
  • இயற்கை விவசாயம் குறித்து தெரிந்துகொண்டு, விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயத்துக்கு மாறுவது அவசியம்.
  • மண்ணை வளப்படுத்த, பல தானிய பயிர் முறை சிறந்ததாக உள்ளது.
  • சணப்பை, ஆமணக்கு, நிலக் கடலை, பயறு வகைகளை ஏக்கருக்கு 25 கிலோ விதைக்க வேண்டும்.
  • பூக்கும் பருவத்தில், பூவோடு சேர்த்து நிலத்தை உழும்போது, நல்ல உரமாவதுடன் மண் வளமும் பெருகுகிறது.
  • ஒரு மூட்டை யூரியா உரத்தில் உள்ள சத்து, ஒரு லிட்டர் மாட்டு ஹோமியத்தில் அடங்கியுள்ளது.
  • இறந்த பசுமாட்டின் கொம்புகளை அகற்றி, வெயிலில் உலர வைக்க வேண்டும். இரண்டு நாள் கழித்து கொம்பை தட்டினால், சதைப்பகுதி வெளியே வந்து விடும்.
  • கொம்பினுள் மாட்டு சாணத்தை அடைத்து, ஈரப்பதம் இல்லாத இடத்தில் மண்ணினுள் வைத்து விட வேண்டும். நான்கு மாதங்களுக்கு பின், அதை எடுத்தால், சிறந்த மண் வள ஊக்கி கிடைக்கிறது.
  • ஏக்கருக்கு 30 கிராம் ஊக்கியை தண்ணீரில் கலந்து தெளித்தால், நிலத்தில் மண்புழு உற்பத்தி அதிகமாகிறது.
  • அடியிலிருக்கும் மண்புழுக்கள் மேலே வந்து, மண் வளம் பெறுகிறது.
  • இயற்கை முறையில் விவசாயம் செய்யும்போது, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, ஆரோக்கியமான மகசூல் பெறமுடியும்.இவ்வாறு, யோகநாதன் பேசினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *