இயற்கை பூச்சி விரட்டியான வேப்பஞ்சாரை தயாரிப்பது எப்படி?

“இயற்கை பூச்சி தடுப்பு தயாரிப்புகள் விவசாயிகளிடையே பிரபலமானதற்கான முக்கிய காரணம், இதை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடிய, குறைந்த முதலீட்டிலுடைய பொருட்களாகும். மேலும் இத்தயாரிப்புகள் நல்ல பயனுள்ளதாக இருக்கும் காரணத்தினால் ஆகும்” என்று கன்யாகுமாரியின், விவோகானந்தா(கேந்தரா) இயற்கை வளமேம்பாட்டுத் திட்ட நிலைய சமூக விஞ்ஞானியான திரு.எஸ். அரவிந்தன் கூறுகிறார்.

பசுமை தமிழகத்தில் பல வகையான இயற்கை பூச்சி விரட்டிகளை பார்த்து இருக்கிறோம். அரளி, வசம்பு போன்ற செடிகளை பயன் படுத்துபவை அவை.
இதோ, வேப்ப மரத்தை பயன் படுத்தி செய்ய படும் வேப்பன்சாரு:

  • முதல் வகையில், சுமார் 6 கிலோ வேம்பு இலையை தண்ணீரில் நனைத்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். பின் அடுத்த நாள் அதை நன்கு அரைத்து, 60 லிட்டர் தண்ணீரில் கரைத்து, தெளிக்க பயன்படுத்தலாம்.
  • இரண்டாவது வகையில், சுமார் 3 கிலோ வேம்பு விதைகளை தண்ணீரில் நனைத்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து அதை அரைத்து கூழாக்கி பின் 60 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
  • மூன்றாவது வகையில், சுமார் 6 கிலா வேப்பபுண்ணாக்கினை நன்கு அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து, அதை 60 லிட்டர் தண்ணீரில் கலந்து, தெளிக்க பயன்படுத்தலாம்.

நன்றி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இயற்கை பூச்சி விரட்டியான வேப்பஞ்சாரை தயாரிப்பது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *