இயற்கை முறையில் தென்னை விவசாயம்

சுல்தான்பேட்டை வட்டாரத் தில் தென்னை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள், ரசாயன உரங்களை கைவிட்டு, இயற்கை உரத்துக்கு மாறி வருகின்றனர். இயற்கை உரம் பயன் படுத்துவதால், 15 சதவீதம் மகசூல் அதிகரித்து வருகிறது.

சுல்தான்பேட்டை வட்டாரத் தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் 10 லட்சத்துக்கும் மேலாக தென்னை மரங்கள் உள்ளன. தென்னையில் நல்ல மகசூல் கிடைப்பதற்காக, இப்பகுதி விவசாயிகள் பெரும் பாலானோர், யூரியா, பொட் டாஷ், காம்ப்ளக்ஸ் போன்ற ரசாயன உரங்களையும், சிறிது இயற்கை உரங்களையுமே சேர்த்து உரமாக இட்டனர்.

சில விவசாயிகளோ, காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், பசுந்தழையை பயன்படுத்தி இயற்கை உரங்கள் தயாரித்து தென்னைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

ஆட்கள் பற்றாக்குறை, மழைப் பொழிவு குறைவு, தேங்காய்க்கு கட்டுப்படியான விலையின்மை போன்ற காரணங்களால் அவதிப் படும் விவசாயிகள், இயற்கை உரம் மூலம் மகசூல் அதிகரிப்பு, அவர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.

சுல்தான்பேட்டையைச் சேர்ந்த தென்னை விவசாயி கனகராஜ் கூறியதாவது: பிற விவசாயங்களை விட, தென்னை சாகுபடிக்கு அதிக அளவு ஆட்கள் தேவைப் படுவதில்லை. தென்னை சாகுபடி செய்தால் நீண்ட காலம் தொடர்ந்து வருவாய் கிடைக்கும். பெரும் பாலான விவசாயிகள், தங்களது தென்னைக்கு ரசாயன உரங்களையே இட்டு வந்தனர்.

ரசாயன உரங்களை விட, இயற்கை உரங்களை பயன் படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் என்பது சமீபத்தில் தான் விவசாயிகளுக்கு பரவலாக தெரியவந்துள்ளது. தற்போது, வட்டாரத்தில் பல விவசாயிகள் இயற்கை உரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை

  • காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம்,  வேப்பம் புண்ணாக்கு, பூண்டு,  உட்பட 14 இயற்கை பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை அவைகளை நன்றாக கலக்கி, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்கு தண்ணீர் பாய்ச்சவும்
  • இவை ஆறு மாதத்தில் மக்கிய இயற்கை உரமாக உருமாகிறது.
  • ஒரு தென்னை மரத்துக்கு ஓராண்டுக்கு 40 கிலோ முதல் 50 கிலோ வரையி லான இயற்கை உரம் போதும்.
  • இயற்கை உரம் ஒரு கிலோ தயாரிக்க ரூ.3.50 மட்டுமே செலவாகிறது.
  • இயற்கை உரங்களால் விளை விக்கப்படும் தென்னையில் 100 தேங்காய்களுக்கு 17 கிலோ கொப்பரை கிடைக்கும். ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் தேங்காய்களில் 100 தேங் காய்க்கு 13 கிலோ கொப்பரை மட்டுமே கிடைக்கும்.

நன்றி: தினமலர்

தென்னை பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்
இயற்கை உரங்களை பற்றிய இடவுகளை இங்கே படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

5 thoughts on “இயற்கை முறையில் தென்னை விவசாயம்

  1. Panneerselvam says:

    kurukiya kala athika palan tarum marapayeir –
    please I need help immediately
    My contact no. is 9787105509.

  2. Loganathan says:

    உங்கள் தகவல் உபயோகமாக உள்ளது. ஆனால் காயர் வேஸ்ட் என்றால் என்னவென்று தெரியவில்லை. தயவுசெய்து கூறவும். Please explain about kayar waste…

    • gttaagri says:

      ஐயா,

      காயர் வேஸ்ட் (Coir waste) என்பது தென்னை நார் கழிவு. தென்னை நாரில் இருந்து கயறு போன்றவை தயாரித்த பின் கிடைப்பவை. தென்னை நன்றாக விளையும் இடங்களில் இந்த முறையை பயன் படுத்தலாம்

      இதை பற்றி மேலும் இங்கே தெரிந்து கொள்ளலாம்

  3. M. முஹம்மது ஜப்பார் says:

    இயற்கை விவசாயம் என்பது DEEJEY தென்னைக்கு பொருந்துமா ?

Leave a Reply to satheesh kumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *