இயற்கை முறை விவசாயத்தில் நெற்பயிர்

விருத்தாசலம் அருகே கம்மாபுரம் விவசாயி ஒருவர் அனைவருக்கும் முன்மாதிரியாக இயற்கை முறை விவசாயத்தில், நெல் பயிர் செய்து வருகிறார்.

கடந்த காலங்களில் செயற்கையான உரங்கள் வருகைக்கு முன்பு விவசாயம் என்றாலே இயற்கை உரங்கள் மூலம் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.

காலப்போக்கில் செயற்கையான உரங்கள் ஏராளமாக வரத் துவங்கியதால் இயற்கை உரங்களை மறந்தனர்.
தமிழகத்தில் பெரும்பாலான விவசாயிகள் செயற்கை உரங்களை பயன்படுத்தி நெற்பயிர் செய்து வரும் நிலையில், கம்மாபுரம் அடுத்த கீழப்பாலையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேணுகோபால் என்பவர் ஐந்து ஆண்டுகளாக இயற்கை உரங்களை பயன்படுத்தி நெற்பயிர் செய்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

  • ஐந்து ஆண்டுகளாக, இயற்கை முறை விவசாயத்தை செய்து வருகிறேன்.
  • தற்போது ஐந்து ஏக்கரில் ஒற்றை நாற்று நடவு முறையில் வெள்ளை பொன்னி நெல் பயிர் செய்துள்ளேன்.
  • இயற்கை முறையில் அமுத கரைசல் தயாரித்து, அதனை அடியுரத்திற்கு பயன்படுத்துகிறேன்.
  • மாட்டு சாணம் ஒரு கிலோ, கோமியம் 10 லி., வெல்லம் 2 கிலோ ஆகியவற்றை சேர்த்து மூன்று நாட்கள் வரை நொதிக்க வைத்து அமுத கரைசலை தயாரித்து, அதனை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, பாசன தண்ணீரில் கலந்து விடலாம்.
  • அல்லது ஸ்பிரேயர் மூலமும் தெளிக்கலாம்.
  • பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, வேப்பங்கொட்டைகளை இடித்து மூன்று நாட்கள் வரை தண்ணீரில் ஊறவைத்து, பூச்சி விரட்டி தயாரித்து, அதனை ஏக்கருக்கு 3 லிட்டர் தெளிக்கலாம்.
  • அல்லது பூண்டு, வேப்ப இலைகளை சேர்த்து இடித்து, அதனை கோமியத்துடன் மூன்று நாட்கள் ஊறவைத்து தெளிக்கலாம்.
  • ஏக்கருக்கு 75 கிலோ கொண்ட 40 மூட்டை வரை அறுவடை செய்துள்ளேன்.
  • செயற்கை உரங்களிட ஏக்கருக்கு 4,000 ரூபாய் வரை செலவாகும்.
  • இயற்கை முறை விவசாயத்தில் வெல்லம் மட்டுமே விலைக்கு வாங்குகிறேன்.
  • மற்றபடி ஆள் கூலி, அறுவடை செலவு எல்லாமே ஒன்றுதான்.
  • இயற்கை முறை விவசாயம் மூலம் நிலத்தின் தன்மை பாதுகாக்கப்படுகிறது. இ
  • தன் மூலம் உணவை உணவாக வழங்குகிறேன். விஷமாக கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *