இயற்கை வழி முறையில் பூச்சி கட்டுபாடு

மஞ்சள் கரைசல்

சுமார் 20 கிராம் மஞ்சல் கிழங்கு சிறு சிறு தூண்டாக நறுக்கி 200 மில்லிலிட்டர் கோமியத்தில் ஒரு இரவு ஊற வரை வேண்டும். பிறகு அதை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இதனுடன் 2-3 லிட்டெர் வரை தண்ணிர் கலந்து நன்றாக வடிகட்டி செடிகளுக்கு  தெளிக்கவேண்டும்.
கட்டுப்படும் பூச்சிகள் : கம்பளிபுழுக்கள் , அசுவுணிகள் , சிவப்பு சிலந்திகள்

இஞ்சி கரைசல்
50 கிராம் இஞ்சிக்கிழங்கு நன்றாக அறைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 2-3 லிட்டர் வரை தண்ணீர் கலந்து கொண்டு நன்றாக வடிகட்ட வேண்டும் இந்த கரைசலை பூசிக்கட்டுபாட்டிற்குப் பயன் படுதலாம் .
கட்டுப்படும் பூச்சிகள்: இலைப்பேன்கள் , தத்துப்பூச்சிகள் ,அசுவுணிகள்

இஞ்சி,பூண்டு ,மிளகாய் கரைசல்
50கிராம் பூண்டை 10 மில்லிலிட்டர் , மண்ணெண்ணெயில் ஒரு இரவு ஊற வரை வேண்டும் அடுத நாள் பூண்டிண் வெளிதோலை நீக்கி வீட்டு பூண்டை அரைத்து கொள்ள வேண்டும் 25 கிராம் பச்சை மிளகாயையும், 25 கிராம் இஞ்சியையும் தனித்தனியே தண்ணீர் விட்டு அரைத்து க்கொண்டு, இவை இரண்டையும் அரைக்கப்பட்ட பூண்டோடு கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் 3 லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதைத் தெளிப்பதற்கு முன்பு நன்றாக வடிகட்டி க்கொள்ள வேண்டும்.
கட்டுப்படும் பூச்சிகள்: காய்த்தூளைப்பான்கள் , கம்பளிபூழுகள், இலைதூளைபன்கள்

துளசி இலை கரைசல்
2-3 லிட்டர் கரைசல் தயாரிக்க 50 கிராம் துளசி இலையை ஒரு இரவு தண்ணீர்இல் ஊற வைக்க வேண்டும் அடுத்த நாள் இந்த இலையை அறைத்து தாண்ணிருடன் சேர்த்து வடிக்கட்டிய பின் செடிகளுக்குத் தெளிக்க வேண்டும்.இதைத் காலை நேரத்தில் தெளிக்க நல்லது .
கட்டுப்படும் பூச்சிகள்: கம்பளிபூழுகள், சிவப்பு சிலந்திகள், புள்ளி இலை வண்டுகள் , செதில் பூச்சிகள்

பப்பாளி இலை கரைசல்
50 கிராம் பப்பாளி இலைகளி நன்றாக வெட்டி 100 மில்லிலிட்டர் தநீரில் ஒரு இரவு ஊற வரை வேண்டும். மறுநாள் அதை அரைத்து பிழிந்து சாறு யடுக்க வேண்டும் . இதனுடன் 2-3 லிட்டர் தண்ணீர்கலந்து செடிகளுக்குத் தெளிக்க வேண்டும்.
கட்டுப்படும் பூச்சிகள்: கம்பளிபூழுகள்

ஒட்டு திரவம்
மேற்கூறப்பட்ட எல்லாத் தாவர கரைசலையும் தெளிப்பதற்கு முன்பு ஒட்டு திரவமாக காதி சோப்பு கரைசலை பயன்படுத வேண்டும். காதி சோபை ஒரு தண்ணீர்இல் ஊற வைக்க வேண்டும்இந்த சோப்பு கரைசலை ஒரு லிட்டர் தாவர கரைசலைளுடன் 4 மில்லிலிட்டர் என்ற அளவில் கலந்து தெளிப்பதால் தாவர கரைசல் செடிகளின் இலைகளின் மேல் நன்றாக ஒட்டிக்கொண்டு பயன்படோம்.

எல்லாத் தாவரப் பொருட்களையும் சூரிய உதயத்திற்கு முன்பு அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும் .

நன்றி:P  அகிலா BSc Agri, MBA (Agriinfomedia)


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “இயற்கை வழி முறையில் பூச்சி கட்டுபாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *