இயற்கை விவசாயத்தில் சாதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாகபாளையத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து, பருத்தியில் அதிக மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார் விவசாயி ஒருவர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நாகபாளையத்தை சேர்ந்தவர் குருசாமி,50. விவசாயியான இவர், ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களான எரு, கடலை புண்ணாக்கு போன்றவைகளை உரமாக போட்டு, அரை ஏக்கர் நிலத்தில், பருத்தி விளைவித்து 17 குவிண்டால் மகசூல் பெற்று, சாதனை படைத்துள்ளார்.

சாதாரணமாக அரை ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்தால், அதிகபட்சமாக 5 குவிண்டால் மகசூல் பெறும் நிலையில், இவரது மகசூல் சாதனையாக கருதப்படுகிறது.

அவர் கூறுகையில்,”” பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்காமல் விரக்தியடைந்தேன். நண்பர் திலகராஜன் அறிவுரைபடி, இயற்கை விவசாயத்திற்கு மாறினேன்.

அரை ஏக்கரில் கடந்தாண்டு பருத்தி பயிர் செய்தேன்.

இயற்கை உரங்களான கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, ஆமணக்கு விதை புண்ணாக்கு ,எரு, குப்பை போன்றவைகளை உரங்களாக போட்டேன்.

களை வெட்டுதல், பூச்சிகளுக்கு மருந்தடித்தல் போன்ற செலவு குறைந்தது. பருத்தியிலும் ஏராளமான காய்கள் விளைந்தன. அரை ஏக்கரில் 17 குவிண்டால் பருத்தி கிடைத்தது,” என்றார்.

ஸ்ரீவி.,வேளாண் உதவி இயக்குனர் டாக்டர் ஆறுமுகம்,”” வறட்சி காலங்களில் கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைக்கும் தன்மை, இயற்கை உரங்களுக்கு உண்டு. மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டு, பயிர்களுக்கு அதிக பலனை தரும். அதன்படி விவசாயி இந்த உரங்களை பயன்படுத்தி, பருத்தி சாகுபடி செய்து அதிக மகசூலை பெற்றுள்ளார்,” என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *