இயற்கை வேளாண்மையால் பொருட்களுக்கு மவுசு: சுபாஷ் பலேகர்

“”இயற்கை வேளாண் தொழிற்நுட்பத்தை கையாண்டால் தான், உலக சந்தையில், விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும்,” என, ஜீரோ பட்ஜெட் வேளாண் விஞ்ஞானி சுபாஷ் பலேகர்  தெரிவித்தார்.

பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில், “ஜீரோ பட்ஜெட்‘ இயற்கை வேளாண் கருத்தரங்கு, பாலக்காடு சாலையிலுள்ள மின்னல் மகாலில் நேற்று துவங்கியது.

மகாராஷ்டிர மாநில வேளாண் விஞ்ஞானி சுபாஷ் பலேக்கர் பேசியதாவது:

  • பிரதமர் மன்மோகன்சிங், மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, உணவு உற்பத்தியை அதிகரிக்க, நம்மிடம் எந்த தொழிற்நுட்பமும் இல்லை என கூறியுள்ளார்.
  • அரிசி, கோதுமை உற்பத்தியில், நாடு தன்னிறைவு பெற்றிருப்பதாக அரசு அறிவிக்கிறது; இருப்பினும், 165 டன் கோதுமையை, சர்வதேச சந்தையில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.
  • விவசாய உற்பத்திக்கு, ரசாயன உரங்களை பயன்படுத்தினால், உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படாது.
  • பசுமைப் புரட்சி மாநிலமான பஞ்சாப்பில், 30 ஆண்டுகளுக்கு முன், ஒரு ஏக்கரில் 30 குவிண்டால் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, 10 குவிண்டால் மட்டுமே உற்பத்தியாகிறது.
  • ரசாயன உரங்களை பயன்படுத்தி, உணவு உற்பத்தியை இரு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டனர்; ஆனால், ரசாயன வேளாண்மையால், அனைத்து தொழிற்நுட்பமும் தோல்வி அடைந்தது.
  • ரசாயன, ஆர்கானிக் வேளாண்மை தொழிற்நுட்பம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை; இந்த தொழிற்நுட்பத்தால், நாட்டின் பொருளாதாரம், இயற்கை வளம் சுரண்டப்படுகிறது; இதனால், இந்திய விவசாயிகளின் பொருளாதாரம் பாதிக்கும்; இவை, இரண்டுக்கும் மாற்றாக, “ஜீரோ பட்ஜெட்’ இயற்கை வேளாண் முறையை கையாள வேண்டும்.
  • இம்முறையில், 30 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ள, ஒரு நாட்டு மாடு இருந்தால் போதும்.
  • ரசாயனம், ஆர்கானிக் முறையை விட, இயற்கை வேளாண் முறையில் அதிக மகசூல் கிடைக்கும்.
  • பயிர்களுக்கு பூச்சி மருந்து, நிலத்தை உழவு செய்வது போன்றவை தேவையில்லை.
  • செலவில்லாத இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்த, நீர் மற்றும் மின்சாரம் தலா 10 சதவீதம் மட்டுமே தேவைப்படும்;
  • இம்முறையில் விளைவிக்கப்படும் விளைப்பொருட்கள், விஷத்தன்மை அற்றதாக இருப்பதால், உலக சந்தையில் கூடுதல் விலை கிடைக்கும்.
  • இந்த தொழிற்நுட்பத்தை விவசாயிகள் கையாண்டால் தான், இயற்கை வேளாண் புரட்சியை ஏற்படுத்த முடியும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *