கடற்கரையில் காய்கறி சாகுபடி!!

சென்னையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கறையில் திரு. T. K. வெங்கடராமன் அவர்களின் 2 கிராவுண்ட் நிலத்தை பார்த்தால் அனைவருக்கும் ஒரு மாறுதலான எண்ணம் தோன்றும். இவரது நிலம் கடற்கரையிலிருந்து 250 அடி தூரத்திலிருக்கிறது. முழுவதும் மணல் தான் இருந்தது. இங்கு தென்னை மற்றும் சவுக்கு மரங்களே வளர்க்க முடியும்.

நிலத்தை தயார் படுத்துதல் :
நிலத்தை சரிசெய்யும் வேலையில் முதலாக செய்தது, நிலத்தை சுற்றி தடுப்புச் சுவர் எழுப்பினார். அடுத்து நிலத்தினை நன்கு தோண்டி, அங்கு பிளாஸ்டிக் ஷீட் போடப்பட்டது. பிளாஸ்டிக் விரியான் மேல், ஒரு லாரி களிமண் கொட்டப்பட்டு, பின் அதன்மேல் வைக்கோலும், சுமார் 150 கிலோ மரத்தூளும் போடப்பட்டது.
இதன் மேல் 5 லாரி செம்மண்ணும், தொழு எருவும் கலந்து மூடப்பட்டது. பின் இதில் 16 சால்கள் இமைக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் சுமார் 5கிலோ வேப்பம்புண்ணாக்கும், 3கிலோ மண்ப்புழு உரமும் தூவப்பட்டு நன்கு கிளறி விடப்பட்டது.
பின் சால்கள் அனைத்திலும், தொழு எருவுடன் காய்கறிகளான கத்திரிக்காய், கீரை வகைகள் போன்றவற்றின் விதைகள் கலந்து தூவப்பட்டு முறையாக நீர் பாய்ச்சப்பட்டது.
இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஒரு கிலோ – அசோஸ்பைரீலம் (Azospirillum), பாஸ்கோ பாக்டீரியா (phosphobacteria),  ரைசோபீயம் (Rhizobium) மற்றும் 50 கிலோ மண்புழு உரம் ஆகியவை கலந்து முளைத்த நாற்றுகளின் மீது தூவப்பட்டது. இதே போல் அனைத்து சால்களிலும் 6 மாதத்திற்கு ஒரு முறை முறைபடுத்தப்பட்டது.

பஞ்சகாவ்யா :
ஒவ்வொரு வாரமும், சுமார் 2 லிட்டர் மாட்டு சிறுநீரை சுமார் 6 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கப்பட வேண்டும். கூடுதலாக ஒரு மாதத்திற்கு ஒரு முறை பஞ்சகாவ்யாவும் தெளிக்கப்பட வேண்டும். அவரை போன்ற செடிகளுக்கு மரப் பந்தல் அமைக்கப்பட வேண்டும். மேலும் சால்களின் ஓரத்தில் வெங்காயம், தக்காளி போன்றவற்றை வளர்க்களாம். இவ்வாறாக தற்போது 10 கிலோ காய்கறிகளும், 30 – 50 கட்டு கீரைகளும் ஒரு வாரத்தில் கிடைக்கிறது.

விவசாயத்தின் முக்கிய செலவு, இரசாயன உரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளும் வாங்குதலாகும். ஈடுபொருளின் செலவில், 80 சதவிகிதம் இதில் செலவிடப்படுகிறது.

குறைந்த ஈடுபொருள் செலவு :
விவசபயிகள், தாங்களாகவே இயற்கை ஈடுபொருட்களை தயாரித்து கொண்டால், ஈடுபொருட்களுக்கான செலவு குறைக்கப்படும். ஒரு மாதத்தில் சராசரியாக சுமார் 2000 ரூபாய் மொத்த வருமானமாக திரு. வெங்கடராமன் பெறுகிறார். இதில் வேலையாட்கள் சம்பளம் பராமரிப்பு செலவுகள் போக சுமார் 1100 முதல் 1300 வரை லாபம் அடைகிறார்.

தொடர்புக்கு :
திரு. T. K. வெங்கடராமன்,
117 – E,
16 வது குறுக்குத் தெரு,
பெசண்ட் நகர்,
சென்னை,
தமிழ்நாடு – 600090
மின்னஞ்சல்: bhavani_venkataraman@yahoo.com
தொலைபேசி: 044 – 24914299
அலைபேசி: 98407 – 77459

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *