ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால் என்ன?

ரசாயன விவசாயத்தினால் வரும் கேடுகளை எதிர் கொள்ள இயற்கை விவசாயம் ஒரு பதிலாக சொல்ல படுகிறது. ஆனால் மராத்தியத்தில் இருந்து வரும் திரு சுபாஷ் பலேகர் சுலபமான ஒரு பதிலை வைத்து இருக்கிறார். இதற்கு ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்று பெயர்.

விவசாயத்தையும் மாடு வளர்ப்பையும் சேர்த்து அவர் இந்த தொழிற் நுட்பத்தை கண்டு பிடித்து உள்ளார்.

அவர் கூறுகிறார் “விவசாயத்திற்கு இடு பொருள் விலைகள் (உரங்கள், பூச்சி கொல்லிகள்) ஏறி கொண்டே போகின்றன. ஜீரோ பட்ஜெட் முறையில் ஒரு விவசாயி வெளியில் இருந்து ஒரு இடு பொருளும் வாங்க வேண்டியதில்லை. ஒரு விவசாயி, ஒரு நாடு பசுவை வைத்து கொண்டு முப்பது ஏகர் விவசாயம் செய்ய முடியும், ஒரு விதமான இடு பொருளும் வாங்காமல். கோமூத்திரம், சாணி, போன்றவையே போதும்”

இது எப்படி முடிகிறது?

அவர் கூறுகிறார்  ” பயிர்கள் மண்ணில் போடும் உரங்களில் இருந்து 2% மட்டுமே எடுத்து கொள்ளுகிறது. மற்ற 98% பங்கும் காற்று, நீர், மற்றும் சூரிய வெளிச்சம் இருந்து எடுத்து கொள்ளுகிறது. இந்த மற்றதை செய்வது மண்ணில் உள்ள நுண் யிர்கள் தான். ஆனால் இவை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளால் கொல்ல படுகின்றன.

இயற்கையாக, மண்ணில் நுண் இயிரிகளை மீண்டும் கொண்டு வர, பசு சாணம் போதும். ஒரு கிராம் பசும் சாணம் ஐநூறு கோடி நுண் உயிரிகள் இருக்கின்றன. மண்ணின் நலத்தை உயர்த்த, அவர் ஆறு ஆண்டுகள் பல விதமான ஆராய்சிகளை செய்து உள்ளார். வெல்லம, சுண்ணாம்பு போன்றவையும் அவர் பயன் படுத்துகிறார். நாட்டு பசு தான் சரியாக வரும்” என்கிறார் அவர்.

வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய பட்ட Eisenia foetida என்ற மண் புழு பற்றியும் அவர் குறை கூறுகிறார். இந்த மண் புழுக்கள் மண்ணில் உள்ள நுண் உயிரிகளை உண்டு விடுவதால், பயிர்கள் பாதிக்க படுகின்றன என்கிறார் அவர்.

மேலும் விவரங்களுக்கு, பசுமை விகடனில் வரும் தொடரை படியுங்கள். அவர் தமிழ் நாட்டில் நடத்தும் பயிற்சிகளில் பங்கு கொண்டு பயன் பெறுவீர். நன்றி: ஹிந்து நாளிதழ்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால் என்ன?

Leave a Reply to jeeva Cancel reply

Your email address will not be published. Required fields are marked *