பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்சகவ்யா பயன்படுத்த அறிவுரை

பயிர்களின் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, பஞ்சகவ்யம் பயன்படுத்த வேண்டும்’ என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. உழவர் வயல்வெளி பள்ளி பாடத்திட்ட பயிற்சி துறை வெளியிட்ட அறிக்கை:

  • தமிழகத்தில் நூற்பாலைகளுக்கு, 70 லட்சம் பேல்கள் பருத்தி தேவைப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த பருத்தியின் உற்பத்தி, 50 லட்சம் பேல்கள்.
  • தமிழகத்தில், பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகமும், தமிழ்நாடு வேளாண்மைத் துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • இது குறித்து, விவசாயிகளுக்கு குளிர்கால இறவை பருத்தி பயிரிட, உழவர் வயல் வெளி பள்ளிகள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பருத்தியில் தொழில் நுட்பங்கள், பூச்சிமருந்து மற்றும் ரசாயன உரங்களை குறைத்து, இயற்கை உரம் மூலம் வளர்க்கப்படும் பயிர்களில் மகசூல் அதிகரிக்கும்.
  • மேலும் பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்சகவ்யம் பயன்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும்.
  • விவசாயிகள் தொழுவத்திலும், பண்ணையிலும் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பயிர் ஊக்கி பஞ்சகவ்யம் தயார் செய்யலாம்.
  • தயிர் ஊறல் ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிக்கவும், அவற்றை பயிர்களுக்கு உபயோகிப்பதால் பூச்சிதாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
  • பஞ்கவ்யம் எல்லா பயிர்களுக்கும் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், நோய் பூச்சிக்கு எதிர்ப்புசக்தி கொடுக்கக் கூடியதாகவும் உள்ளது.
  • பஞ்சகவ்யத்தை பயிர்களுக்கு தெளித்த பின் பருத்தி, சூரியகாந்தி, கொத்தமல்லி பயிர்களில் கண்கூடாக கூடுதல் மகசூல் தருவதை காணமுடியும் என்பதால், பயிர்களுக்கு பஞ்சகவ்யத்தை பயன்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்சகவ்யா பயன்படுத்த அறிவுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *