யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரம்

: “”யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரத்தின் விதைகள், விவசாயக் கல்லூரியில் விற்கப்படுகிறது,” என, மதுரை விவசாயக் கல்லூரி முதல்வர், பயிர் இனப்பெருக்கத் துறைத் தலைவர் இப்ராஹிம் தெரிவித்தனர்.

  • சணப்பூ, தக்கைப்பூண்டு வகை பசுந்தாள் உரங்களை விட, புதிய கொழிஞ்சி ரகம் சிறப்பாக உள்ளது.
  • தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், அனைத்து மண் வகைக்கும் ஏற்றது.
  • எக்டேருக்கு 15 – 20 கிலோ விதை தேவைப்படும்.
  • களை நிர்வாகம், உரம் தேவையில்லை.
  • நேரடியாக விதைக்கலாம். பூச்சிகள் அதிகம்  தாக்காது.
  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
  • 30 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சலாம்.
  • 65 முதல் 70 நாட்கள் வளர்ந்த பசுந்தாள் உரங்களை அப்படியே மடக்கி உழவு செய்ய வேண்டும்.
  • பத்து நாட்கள் கழித்த பின், விருப்பப்பட்ட பயிரின் விதை நடலாம்.
  • பயிர்களில் யூரியாவின் பயன்பாட்டை பெருமளவு குறைத்து விடும்.
  • மூன்று மூட்டை யூரியா தரும் சத்தை, பசுந்தாள் உரம் தருகிறது. மண் வளத்தை பாதுகாக்கிறது.
  • மேலும் மண்ணில் குறைந்த நாட்களில் மட்கி விடும். மற்ற பசுந்தாள் உரங்கள் மட்க, நீண்ட நாட்களாகும்.
  • ஒரு முறை விதைத்தால்,  மீண்டும் தானாக முளைத்து வளரும். விவசாயிகளுக்கு ஏற்ற உரம் இது, என்றனர்.

பசுந்தாள் உர விதைகளுக்கு, மதுரை விவசாயக் கல்லூரியை அணுகலாம். மதுரை விவசாயக் கல்லூரி, மேலூர் சாலை, மதுரை, தொலைபேசி எண்: 04522422956

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4 thoughts on “யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *