ரசாயன பூச்சிக்கொல்லிகள் வேண்டாம்!

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை புதுவை விவசாயிகள் குறைத்தது குறித்து கூறும்,புதுவை, பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையபூச்சியியல் வல்லுனரும், ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகத் திட்டத்தின் முதன்மை பயிற்றுனருமான முனைவர் விஜயகுமார் கூறுகிறார் :

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

 

  • உணவுப் பற்றாக்குறையைப் போக்க, அறிமுகம் செய்யப்பட்ட பசுமைப் புரட்சியில், ரசாயன உரங்கள் மூலம், விளைச்சலை அதிகரிக்கச் செய்து, விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
  • அதிக உற்பத்தி என்ற இலக்கு மட்டுமே, பிரதானமாக இருந்ததால், உணவுப் பொருட்களில் ரசாயனக் கலப்பு அதிகரித்தது.
  • இதையடுத்து, இதற்குத் தீர்வு காணும் விதமாக, மகசூல் மட்டுமல்லாது, பயிர்களை தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் உருவாக்க வேண்டுமென்ற நோக்கில், ரசாயனப் பயன்பாடு அல்லாத பயிர்களை சாகுபடி செய்ய, இரண்டாவது பசுமைப் புரட்சி, 1992ல் அமல்படுத்தப்பட்டது.
  • குறைவான செலவில், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, அதிக மகசூலை விவசாயிகள் பெற, ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகத் திட்டத்தை, பிராந்திய வாரியாக உள்ள வேளாண் அறிவியல் மையம் மற்றும் வேளாண்துறை அறிமுகம் செய்தது.
  • கிராமங்கள்தோறும், 30 விவசாயிகளை குழுவாக இணைத்து, உழவர் வயல்வெளிப் பள்ளி துவக்கப்பட்டது. இதன் மூலம், 10 முதல், 14 வாரங்களுக்கு, வாரம் ஒருமறை, மாதிரிப் பண்ணைகள் மூலம், பயிர் தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு கற்றுத் தந்தோம்.
  • குறிப்பாக, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்து, ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம் மூலம், பூச்சிக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் விளக்கினோம்.
  • பூச்சிகளை முழுவதுமாக அழிக்காமல், அதை கட்டுப்படுத்தும் விதமாக, பூச்சிபொறிகளை வயலில் பொருத்தி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல் பூச்சிகளை, ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம் மூலம் கட்டுப்படுத்தவும் பயிற்சி தரப்பட்டது.
  • கடந்த, 17 ஆண்டுகளுக்கு முன், 164 டன்னாக இருந்த ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டை தற்போது, 40டன்னாக குறைத்து உள்ளோம். அதன் மூலம், 95.74 சதவீதம் உயிரி உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி களை, தற்போது புதுவை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
  • மேலும், புதுவையில் உள்ள சூரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், எங்களதுவேளாண் அறிவியல் நிலையத்தின் முயற்சியால்,இயற்கை வேளாண்மைக்கு முழுவதுமாக திரும்பி உள்ளனர். இந்த கிராமத்தைச் சார்ந்த மக்கள், தொழு உரம் மற்றும் நகரப் பகுதிகளில் கொட்டப்படும் குப்பையை, பயிர்களுக்கு உரமாக இட்டு வருகின்றனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *