வீட்டிலேயே எளிதாக இயற்கை உரம் தயாரிப்பது எப்படி

நம் வீட்டில் சேருகிற குப்பைகள், காய்கறி கழிவுகளை வெளியே கொட்ட இப்போது இடமே இல்லை என்ற நிலைமை இருக்கு.
அப்படியே இடம் இருந்தாலும், கொட்டிய குப்பைகள் அப்புற படுத்தாமல் சுற்றுபுறம் அசுத்தம் ஆகி வருவதையும் காண்கிறோம்.
இவற்றை தடுத்து, நம் வீட்டிலேயே இயற்கை உரம் தயாரிப்பது எப்படி என்று குமுதம் சிநேகிதி இதழில் வந்துள்ள ஒரு கட்டுரையில்
இருந்து..

  • நம் வீட்டில் விழுகிற காய்கறி கழிவுகள், வாடி போன பூக்கள், இலைகள், தேங்காய் நார், போன்றவற்றை சேகரிக்கணும்.
  • இந்த குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கவர்களை எடுத்து விடவும்
  • இந்த கழிவுகளை ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் நிரப்பவும்.
  • இந்த பக்கெட்டின் பக்கவாட்டில் சிறு சிறு துளைகள் இடவும்.
  • குப்பை நிறைந்தவுடன், பக்கெட்டை ஒரு பாலிதீன் கவர் சுத்தி ஒரு ஓரத்தில் விடவும்.
  • மூன்று மாசம் கழிச்சு பார்த்தால் இந்த பக்கெட்டில் இருப்பவை தார் நிறத்தில் பொலபொல உதிர் விதமாக இருக்கும்
  • இந்த பக்கெட்டின் 6 கிலோ கழிவுகள் போட்டால், நமக்கு ஒரு கிலோ அளவுவிற்கு வந்து இருக்கும்.
  • எடை குறைவாக இருந்தாலும் சிறந்த இயற்கை உரம் இது.
  • இதை மண்ணோடு சேர்த்து போட்டால் செடிகள் நன்றாக வளரும்.

நன்றி: குமுதம் சிநேகிதி feb 16-29, 2012 இதழ்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “வீட்டிலேயே எளிதாக இயற்கை உரம் தயாரிப்பது எப்படி

Leave a Reply to Devi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *