2 ஏக்கரில் 1 டன் மகசூல்: தூயமல்லி நெல் சாகுபடி

பாரம்பரிய விவசாயத்தால் பலர் நஷ்டமடைவதாக கூறுகின்றனர். சிலர் மட்டுமே எதனை எந்த பருவத்தில், எப்படிச் செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என அறிந்து சாதனை புரிகின்றனர். அந்த வரிசையில் பழநி சாப்ட்வேர் இன்ஜினியர் ஜெ.ஜெய்சங்கர், வேளாண் நிபுணர்களின் ஆலோசனைப்படி ஒருங்கிணைந்த, முற்றிலும் இயற்கை விவசாயத்தை கடைபிடித்தும், கால் நடைகள் வளர்த்தும் லாபம் ஈட்டிவருகிறார்.

Courtesy: Dinamalar

இயற்கை உரம், மருந்து காங்கேயம் நாட்டு மாடுகள், குட்டை சர்க்கரை மாடு, செம்மறி ஆடுகள் வளர்க்கிறார்.

அவற்றின் சாணம், கோமியத்தை பயன்படுத்தி பஞ்ச கவ்யம், பூச்சி விரட்டி மருந்துகள் தயார் செய்கிறார்.

அதனை 2 ஏக்கரில் சாகுபடி செய்து பழைய ரகமான துாயமல்லி நெல் மற்றும் புடலை, தக்காளி, கத்தரி, பீட்ரூட் போன்ற காய்கறி சாகுபடிக்கு பயன்படுத்துகின்றனர்.

பாப்பாளி, பரங்கிக்காய் பயன்படுத்தியும், மீன் கழிவுகள், நாட்டுச் சர்க்கரையில் ஊட்ட சத்து கரைசலும் தயாரிக்கிறார். இவை நுண்ணுாட்டச் சத்து உரமாக பயிர்கள், காய்கறிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. விவசாய நண்பனான மண்புழுக்களையும் வளர்க்கின்றனர். இதனால் உரம், எதையும் விலை கொடுத்து வெளியில் வாங்குவதில்லை.

துாயமல்லி நெல் ரகம்:

பொதுவாக நுாறு ஆண்டு பழமையான துாயமல்லி நெல்ரகம் 180 நாட்களில் (6 மாதம்) விளையும். எனவே விவசாயிகள் அந்த ரகத்தை அதிகம் சாகுபடி செய்வதில்லை. தஞ்சாவூர் பகுதியில் இந்த ரகம் பிரபலம்.

ஆனால் ஜெய்சங்கர், வேளாண் துறையினரின் ஆலோசனைப்படி, 2 ஏக்கர் நிலத்தில் துாயமல்லி நெல் சாகுபடி செய்துள்ளார். பண்ணைக் குட்டை அமைத்து, நீர்மேலாண்மை செய்வதால் வறட்சியிலும் துாயமல்லி நெற்பயிர்கள் ஆள் உயரத்திற்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

2 ஏக்கரில் 1 டன் சாகுபடி

ஜெய்சங்கர் கூறியதாவது:

  • மலைப் பகுதியில் பெய்யும் மழைநீரை சேமிக்க 2 லட்சம் ரூபாய் செலவில் பண்ணைக் குட்டை அமைத்தேன்.
  • சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல்கள் அமைத்தேன்.
  • காட்டு விலங்குகளிடம் பயிரை பாதுகாக்க அகழியும் அமைத்தேன்.
  • அகழியில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
  • காலியிடங்களில் தேக்கு, செம்மரம் மற்றும் பனை, பரம்பைவேலிச் செடிகளும் வளர்க்கிறோம்.
  • இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தியதால் காய்கறி பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளது.
  • துாயமல்லி நெல் சாகுபடியில் நல்ல மகசூல் கிடைத்துள்ளது. உரம், மருந்து என செலவு இன்றி கால்நடைகளுக்கு தீவனமும், அவற்றின் மூலம் உரமும், பூச்சிக்கொல்லி மருந்தும் தயாரித்தால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்தன.
  • அரை ஏக்கர் தக்காளியில் 75 பெட்டி பழங்கள் கிடைக்கிறது. துாயமல்லி விதை நெல் இலவசமாக கிடைத்தது.
  • 60 சென்டில் நடவுக்கூலி, அறுவடைக் கூலி மொத்தம் 12 ஆயிரம் ரூபாய் செலவானது. ஒரு குழியில் இரண்டு குழிக்கான வைக்கோல் கிடைக்கிறது.
  • அதில் 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. துாய மல்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ 100 ரூபாய் வரை கிடைக்கும். ஒரு டன் நெல் விளைந்துள்ளது. இயற்கை முறையில் விவசாயம் செய்ததால் இந்தளவு லாபம் கிடைக்கிறது, என்றார்.

பண்ணைக் குட்டை அமைத்து, நீர்மேலாண்மை செய்வதால் வறட்சியிலும் துாயமல்லி நெற்பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

தொடர்புக்கு 08861282389
– சி.முருகன், பழநி.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *