மக்கும் எரு தயாரிக்கும் முறைகள்

மக்கும் எருவை குழிமுறை குவியல் முறை என 2 முறைகளில் தயாரிக்கலாம்.

  • மக்கும் எரு தயாரிக்கும் இடம் நிழல் உள்ளதாக இருக்க வேண்டும்.
  • மழைநீர் தேங்காத மேட்டுப்புறமாக இடத்தை தேர்வு செய்து குழி எடுக்க வேண்டும்.
  • ஆழம் 3 அடுக்கு மேல் போக கூடாது. 3 அடிக்கு கீழே குறைந்த எண்ணிக்கையிலே பாக்டீரியா வாழ முடியும்.
  • நீளம், அகலம் நமது வசதிக்கு ஏற்ப வைத்து கொள்ளலாம். முதலாவதாக காய்ந்து பட்டுப்போன பெரும் குச்சிகளை முறித்து போட்டு 3/4 அடி உயரத்திற்கு பரப்ப வேண்டும்.

நிலத்தின் மட்டம்

  • பெரிய குச்சிகளுக்கு மேலே ஒரு அடி உயரத்திற்கு பொடி குச்சிகள் காய்ந்த தழை தாம்புகளை பரப்பலாம்.
  • சிறிதளவு மாட்டு சாணத்தை உதிர்த்து விட்டு தண்ணீர் நனையும் அளவு தெளித்து விட வேண்டும். இதற்கு மேலே பச்சை இலையை ஒரு அடி உயரத்திற்கு பரப்பி அதன் மேல் மாட்டு சாணத்தை தூவ வேண்டும்.
  • இப்படி மாறி மாறி நிலத்தின் மட்டத்தை விட 2 அடி உயரம் வந்ததும் நிலத்தின் மேல் மண்ணை சுரண்டி போட்டு மூடவும்.
  • இதில் நிறைந்துள்ள நுண்ணுயிர்கள் பாலை தயிராக்குவது போன்ற வேலையை எரு முட்டில் நடத்துகிறது. பின்னர் வண்டல் மண்ணால் குழப்பி மொழுகி விட வேண்டும்.
  • வெடிப்பு வரும் போதெல்லாம் மீண்டும் மொழுகி விட வேண்டும். தொடர்ந்து இதை சீராக செய்தால் 45 நாட்களில் மக்கும் எரு தயாராகி விடும்.

குவியல் முறை

  • நிலத்தின் மேல் மக்கும் எரு தயாரிப்பதில் சில சாதகங்கள் உண்டு. தயாரிக்கும் போதே புரட்டி கொள்ளலாம். மழைநீர் தேங்காத மேட்டு பகுதியில் மர நிழலிலோ அல்லது பந்தல் போட்டோ மக்கும் எரு தயாரிக்கலாம்.
  • எரு தயாரிக்க 3 அடி அகலம் 15 அடி நீளம் 4 அடி உயரம் என இந்த அளவில் செய்யும் போது வேலை சுலபமாக இருக்கும். முதலில் அடி மண்ணை 1/2 அடி ஆழத்திற்கு கொத்தி விட வேண்டும். பிறகு காய்ந்து பட்டுபோன பெரும் குச்சிகளை முறித்து போட்டு 3/4 அடி உயரத்திற்கு பரப்ப வேண்டும்.

ஜல்லி முட்டு வடிவம்

  • பெரும் குச்சிக்கு மேலே ஒரு அடி உயரத்திற்கு சிறிய குச்சிகள், காய்ந்த தழைகளை பரப்ப வேண்டும். இதற்கு மேலே சாணியை உதிர்த்து விட்டு இலை, தழை, சாணி நன்கு நனையும் வரை தண்ணீர் தெளிக்க வேண்டும். இதற்கும் மேலாக பச்சை இலை தழையை 1 அடி உயரத்திற்கு பரப்ப வேண்டும்.
  • இதன்பின்னர் 4 அடி உயரம் வரும் வரை இலை, தழை, சாணியால் அடுக்கு அடுக்காக நிரப்பி வர வேண்டும். இதற்கு மேலே 1/2 அடி கனத்திற்கு வண்டலை நிரப்ப வேண்டும்.இப்பாத்தி நிரப்பி முடியும் போது ஜல்லி முட்டு வடிவத்தில் இருக்க வேண்டும்.

தழைச்சத்து:

  • ஒவ்வொரு முறையும் இலை, தழை பரப்பிய பின்னர் சாணத்தை உதிர்த்து விட்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை வெட்டி எரு மூட்டை நன்கு கொத்தி புரட்டிக் கொடுக்க வேண்டும். பின்னர் எரு மூட்டை நன்கு எடுத்து ஜல்லி முட்டு வடிவத்தில் குவித்து தண்ணீர் தெளிக்க வேண்டும்.
  • இப்படி 3 வாரங்கள் செய்தால் நன்கு மக்கிய எரு கிடைக்கும். அல்லது நிரப்பிய எரு மேட்டின் மேற்பரப்பில் 3 அல்லது 4 பானைகளை வைத்து தண்ணீரால் நிரப்பலாம். புரட்டி கொடுக்க வேண்டிய வேலையும் மிச்சமாகும். மக்கும் எரு தயாரான உடனே தேவையில்லாமல் இருந்தால் எரு மேட்டின் மேல் தழை சத்தை சேர்க்க கூடிய செடி, கொடி விதைகளை (தக்கைபூண்டு, கொள்ளு, உளுந்து, பாசிபயிறு, தட்டை) போட வேண்டும்.

கால் நடை கழிவு:

  • கால்நடைகளை கட்டி இருக்கும் அல்லது அடைத்திருக்கும் இடத்தில் குளத்து வண்டல் மண்ணை 1/4 அடி கணத்திற்கு பரப்ப வேண்டும். ஒரு வாரம் ஆனதும் பரப்பிய வண்டல் மண்ணை சுரண்டி எடுத்து விட்டு புதிய வண்டலை பரப்ப வேண்டும்.
  • சுரண்டி எடுத்த வண்டல் மண்ணை மக்கும் எரு மூட்டில் கலந்து கொள்ளலாம். மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றினால் மக்கும் எருவை எளிதில் தயாரிக்கலாம்.

தகவல் அளித்தவர் முருகன், MSSRF, திருவையாறு

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *