மண்வளம் பெறுக பசுந்தாள் உரம்

மண்வளம் பெருகவும், அதிக மகசூல் பெற சுந்தாள் உர பயிர் சாகுபடி செய்யலாம் என வேளாண்துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

  • அதிக மகசூல் பெற வேண்டும் என்றால் இயற்கை உரங்களை மண்ணில் இட வேண்டும். இதில் முக்கிய பங்குவகிப்பது பசுந்தாள் உரங்கள் மற்றும் பசுந்தழை உரங்களாகும்.
  • நடப்பு சம்பா சாகுபடிக்கு ஒருசில இடங்களில் பரவலாக ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நாற்றுகள் விடப்பட்டு 20 முதல் 30 நாள் வயதுடைய பயிர்களாக உள்ளன.
  • நாற்று விடப்பட்ட இடங்களை தவிர்த்து மீதமுள்ள சாகுபடி நிலப்பரப்பில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.
  • பசுந்தாள் உரத்தில் தக்கை பூண்டு, கொளிஞ்சி, அகத்தி, சீமை அகத்தி, பிள்ளிபயிர் சிறந்தவையாகும்.
  • பயிர்வகை இனத்தை சேர்ந்த பசுந்தாள் உர பயிர்கள் காற்றில் உள்ள தழைசந்ததை கிரகித்து 70 சதவீதம் வரை வேர்முடிச்சுகளில் நிலைநிறுத்தி அதில் ஒருபகுதியை மண்ணில் சேர்ப்பதால் நிலம் வளமடைகிறது. மண் அரிப்பை தடுத்து மேல் மண் இழப்பை தடுக்கிறது.
  • மண்ணுக்கு வளம் சேர்ப்பது மட்டுமல்லாமல் பிடிப்பு பயிராகவும், நிழற்பயிராகவும், மூடு பயிராகவும், தீவன பயிராகவும் பயன்படுகிறது.
  • மண்ணின் கரிம பொருட்களை அதிகரிக்க செய்கிறது.
  • பசுந்தாள் எருவானது பயிரின் பேரூட்ட சத்தான தழைசத்து மண்ணில் இருந்து நீர் மூலம் விரயமாவதை தடுத்து நிறுத்த உதவுகிறது.
  • நுண்ணூட்ட சத்துகளை உறிஞ்சி தன்னுடன் வைத்து கொண்டு பிறகு மண்ணில் உள்ள பயிருக்கு தேவைப்படும் போது எளிதில் கிடைக்க செய்கிறது.
  • எனவே அனைத்து விவசாயிகளும் பசுந்தாள் உர பயிர்களை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது மண்வளம் பெருகியுள்ள நிலத்தில் சாகுபடி செய்து அதிகமகசூல் பெறலாம்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *