யூரியா வீணாவதைத் தடுக்க விவசாயிகளுக்கு யோசனை

யூரியாவை நேரடியாக பயிருக்கு இடும் போது, வீணாவதைத் தடுக்க யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு கலந்து இடலாம் என வேளாண் துறை விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் ந. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • நெல் பயிருக்கு 16 வகையான சத்துகள் தேவைப்படுகின்றன. இதில் அதிக அளவில் பயிருக்குத் தேவைப்படுவது தழைச்சத்து.
  • தழைச்சத்தை அளிக்கும் உரம் யூரியா, அமோனியம் குளோரைடு, அமோனியம் சல்பேட் ஆகியவையாகும்.
  • இதில் விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தும் யூரியாவில் 46 சதம் தழைச்சத்து உள்ளது. உற்பத்திச் செலவைவிட குறைவான விலையில் அரசு மானியத்துடன் யூரியா தனியார் கடைகளிலும், கூட்டுறவு சங்கத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.
  • நெல் வயலில் யூரியாவை நேரடியாக இடும் போது, ஏறத்தாழ 30 சதம் மட்டுமே பயிருக்குக் கிடைக்கிறது.
  • 70 சதம் பயிருக்குக் கிடைக்காமல் பல்வேறு காரணங்களால் வீணாகிறது.
  • எனவே, யூரியாவின் முழுப் பலனும் பயிருக்குக் கிடைக்க யூரியாவுடன் ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு கலந்து இடவேண்டும்.
  •  இதன்படி, 100 கிலோ யூரியாவுக்கு ஒரு கிலோ தார் வீதம் ஒரு உலோகப் பாத்திரத்தில் தார் உருகும் அளவுக்கு காய்ச்ச வேண்டும்.
  • பின்னர், அதைக் குளிரவைத்து, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் சேர்த்து மெதுவாக கலக்க வேண்டும்.
  • திரவ நிலைக்கு மாறிய தாரை குவித்து வைக்கப்பட்ட யூரியா உரத்தின் மீது ஊற்றி நன்றாகக் கலக்க வேண்டும்.
  •   பின்னர், பொடி செய்யப்பட்ட வேப்பம் புண்ணாக்குத் தூளை (100 கிலோ யூரியாவுக்கு 20 கிலோ வீதம்) கலக்க வேண்டும். நிறைவாக 80 கிலோ ஜிப்சத்தை நன்றாகக் கலந்து மேலுரமாக இட வேண்டும்.
  • ஒரு முறை ஏக்கருக்கு 22 கிலோ யூரியா மட்டுமே இட வேண்டும்.
  •  இவ்வாறு யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணாக்கு கலந்து இடும்போது யூரியா சிறிது, சிறிதாக கரைந்து பயிருக்குத் தேவையான அளவுக்கு கிடைக்கும். இதனால், மறுமுறை யூரியா போடும் வரை பசுமை மாறாமல் பயிர் நன்கு வளர்ச்சியுடன் காணப்படும்.
  •   யூரியாவின் உபயோகத் திறன் அதிகரிப்பதால், செலவும் குறையும்.
  • பூச்சி நோய்த் தாக்குதலும் குறையும். விளைச்சல் அதிகரிக்கும் என இளஞ்செழியன் தெரிவித்தார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “யூரியா வீணாவதைத் தடுக்க விவசாயிகளுக்கு யோசனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *