எள் சாகுபடி டிப்ஸ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்த எள்ளை உடனடியாக விற்பனை செய்யுங்கள் என்று வேளாண்மை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவண்ணாமலை வேளாண்மை துணை இயக்குனர்(வேளாண் வணிகம்) கி.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள கூறி இருப்பதாவது:

  • இந்தியாவில் எள் உற்பத்தியில் 70 சதவீதத்தை மேற்கு வங்கம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 மாநிலங்கள் உற்பத்தி செய்கின்றன. மீதமுள்ள 30 சதவீதம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரம், உத்தரபிரதேச மாநிலங்கள் உற்பத்தி செய்கின்றன.
  • தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் எள் உற்பத்தி யில் முன்னணி வகிக்கிறது. எள் பாசன சாகுபடி டிசம்பர்-ஜனவரியில் பயிரிடப்பட்டு மார்ச்-மே மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
  • ஏற்றுமதி சந்தையை பொருத்தமட்டில் சீனா தனக்கு தேவையான எள்ளை ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நல்ல தரத்துடன் இந்தியாவை விட குறைந்த விலையில் இறக்குமதி செய்கின்றன.
  • கடந்த தைப்பட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் எள் சாகுபடி பரப்பு 400 எக்டேர் அதிகரிக்கப்பட்டுள்ளது.தற்சமயம் சிவப்பு எள் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குவிண்டாலுக்கு ரூ.6800 முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
  • ஏப்ரல்-மே அறுவடைக்கு வரும் தரமான சிவப்பு எள்ளின் விலை குவிண்டாலுக்கு ரூ.7500 முதல் 7700 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை.
  • ஆகவே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்த எள்ளை உடனடியாக விற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *