கத்திரிக்கு உயிரியல் பூச்சி கொல்லி

கத்திரி பயிருக்கு மிக அதிக அளவில் பூச்சிகள் தாக்கும் என்பது நாம் அறிந்ததே. இதனால் விவசாயிகள் அதிக அளவில் ரசாயன பூச்சி கொல்லிகளை பயன் படுத்தி வருகிறார்கள். சமிபத்திய ஆய்வுகளில் நுகர்வோருக்கு வந்து அடையும் காய்கறிகளில் ஆபாத்தான அளவில் ரசாயன பூச்சி கொல்லிகளின்  எச்சம் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கத்திரியை தாக்கும் நோய்களில் முக்கிய மானது ஷூட் அண்ட் போர்ர் (குருத்து மற்றும் காய்த்துளைப்பான் – leucinodes orbonalis – லூசினோடஸ் ஆர்பொனாளிஸ் ) ஆகும்.

இது கத்திரியில் 30-100% வரை இழப்பை ஏற்படுத்தும்.

இந்த தாக்குதலை பெங்களூரில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Horticultural Research) உயிரியல் கொல்லி ஒன்றை கண்டு பிடித்து உள்ளது.

Trichogramma chilonis எனப்படும் இந்த உயிரியல் கொல்லியை கத்திரி தோட்டத்தில் விடுவதின் மூலம் இந்த நோய் பெரும் அளவில் கட்டு படுகிறது. ரசாயன பூச்சி கொல்லிகளின் தேவையும் இல்லை.

இதை பற்றி இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் சேர்ந்த Dr அமரிக் சிங்க் சிது கூறுகையில் “இந்த தொழிற் நுட்பத்தால் பல கோடி ரூபாய் மிச்ச படும். விவசாயிகளுக்கு சின்ன பேப்பரில் 250-400 முட்டைகளை வைத்து கொடுகிறார்கள்.இந்த பேப்பரை கத்திரி செடி மீதோ அல்லது அருகில் உள்ள குச்சியின் மீதோ கட்ட வேண்டும். இந்த முட்டைகளில் இருந்து வெளியேறும் Trichogramma chilonis உயிரியல் கொல்லிகள் குருத்து மற்றும் காய்த்துளைப்பான் கட்டு படுத்துகிறது.

கத்திரி செடியில் கட்டப்பட்டுள்ள உயிரியல் கொல்லி பேப்பர் நன்றி: ஹிந்து
கத்திரி செடியில் கட்டப்பட்டுள்ள உயிரியல் கொல்லி பேப்பர் நன்றி: ஹிந்து

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
இதன் விலை ரூ 150-200 மட்டுமே, ரசாயன பூச்சி கொல்லிகளின் விலை 2000 வரை போகும்.  இதன் மூலம் ஒரு விவசாயி ஹெக்டேருக்கு ரூ 25000 வரை சேமிக்க முடியும்.” என்கிறார்

மேலும் விவரம் அறிய அணுகவும்:
Dr கிருஷ்ணமூர்த்தி, அலைபேசி எண் 09448503867 அல்லது கங்கா விசாலாக்ஷி, அலைபேசி எண் 09448551630.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கத்திரிக்கு உயிரியல் பூச்சி கொல்லி

Leave a Reply to meghala Cancel reply

Your email address will not be published. Required fields are marked *