கரும்பில் இடைக்கணு புழுவை அழிக்க ஒட்டுண்ணி முறை

கரும்பில் இடைக்கணு புழுவை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒட்டுண்ணியை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேல்மலையனூர் வேளாண் உதவி இயக்குனர் பழனிவேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

  • கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் ஏக்கருக்கு 1200 மெட்ரிக் டன் பெறுவதற்காக செம்மை சாகுபடி மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.
  • தொழில் நுட்ப பயிற்சி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ராஜ் ஸ்ரீசுகர்ஸ் மூலம் வழங்கப்படுகிறது.
  • மக்கிய தொழு உரம், மண்புழு உரத்தை பயன்படுத்தினால் மண் வளம் பெருகும் அதிக விளைச்சலும் கிடைக்கும்.
  • தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மண்புழு உற்பத்தி கூடராம் அமைக்க 50 சதவீதம் மானியத்தில் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
  • ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க 50 சதவீத மானியத்தில் 2425 ரூபாய் வழங்கப்படுகிறது.
  • விவசாயிகள் தங்களது வேளாண் மற்றும் கால்நடை கழிவுகளை முறையாக மக்க வைத்து பயன் படுத்தி கொள்ள முன்வர வேண்டும்.
  • கரும்பில் காணப்படும் இடைக்கணு புழுவை கட்டுப்படுத்த எந்த ரசாயன பூச்சி மருந்துகளாலும் 100 சதவீதம் முடியாது.
  • ஒட்டுண்ணி விடுவதால் மட்டுமே 100 சதவீதம் இந்த புழுவை ஒழிக்க முடியும். சுற்று புற சூழல் மாசு படுவதையும் தவிர்க்கலாம்.
  • அவலூர்பேட்டை அடுத்த தாயனூர் கிராமத்தில் ஒட்டுண்ணி உற்பத்தி மையம் உள்ளது.
  • இங்கு செம்மேடு ராஜ்ஸ்ரீசுகர்ஸ் கரும்பு ஆலை விவசாயிகள் ஒட்டுண்ணியை பெற்று இடைக்கணு புழுவை கட்டுப்படுத்தி பயனடையலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *