நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை

நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை மூலம் ஒரு எக்டருக்கு 249 டன் கரும்பு மகசூல் பெறலாம் என தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக சோதனைத் திடல்கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.

  • தமிழகத்தில் உள்ள மொத்த சாகுபடி பரப்பு 3.06 லட்சம் எக்டரில் சராசரி விளைச்சல் எக்டருக்கு 105 டன் ஆகும்.
  • ஆனால் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையை பின்பற்ற தொடங்கியபின், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாகுபடி அதிகரித்துள்ளது.
  • ஈரோடு மாவட்ட விவசாயி ஒருவர் ஒரு ஏக்கருக்கு 93.8 டன் கரும்பு மகசூல் பெற்று சாதனை படைத்துள்ளார்.
  • எனினும் அவர் இரண்டு கணுக்கள் உள்ள கரணைகளை
    விதைத்ததால் போக்குவரத்திற்கு அதிகமாக செலவு செய்துள்ளார்.
  • ஆனால் நீடித்த நிலைத்த சாகுபடியில் ஒரு கணு கரணை பயிரிடும் முறைமூலம் 250 கிலோ கரணைகள் மட்டும் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தி உற்பத்தி செலவுகளை குறைக்கலாம்.
  • மரபாக கரும்பு பயிரிடும் விவசாயிகளும் இந்த நவீன முறையை கற்று பயன்பெறலாம்.
  • விவசாயிகள் ஜே 86032 கரும்பு ரகத்தைப் பயிரிட்டு வருகின்றனர். இந்த ரகம் சிவப்பு வேர் அழுகல் நோய் தாக்கக்கூடியது.
  • புதிய கரும்பு ரகங்களான கோ.சி.24, எஸ்.ஜே.7 ஆகிய ரகங்களைப் பயிரிட வேண்டும்.
  • கோ.சி.24 ரகம் அதிக விளைச்சலாக எக்டருக்கு 228 கரும்பு மகசூல் தருகிறது.
  • நீடித்த நிலைத்த சாகுபடி முறை மூலம் எக்டருக்கு 300-350 டன் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.இந்த ரகம் இயந்திர அறுவடைக்கு உகந்தது.
  • மேலும் இந்த ரகத்திலிருந்து 12 சதவீதம் சர்க்கரை உற்பத்தி செய்யலாம்.
  • களர் மண்ணில் வளரும் இயல்புடையது.
  • எஸ்.ஜே.7 ரகத்தில் 13.6 சதவீதம் சர்க்கரை உற்பத்தி செய்யலாம்.ஆனால் தற்போது உள்ள ரகங்களிலிருந்து சர்க்கரை ஆலைகளில் 10 சதவீதம் மட்டுமே சர்க்கறை பெறப்பட்டு வருகிறது.
  • உழவர்கள் சொட்டு உரப்பாசன முறையைப் பயன்படுத்தி சிக்கன நீர் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும்.

(தகவல்: முனைவர் ப.முருகேச பூபதி, துணைவேந்தர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-641 003, பிப்ரவரி 13, 2012ம் நாள் ஆற்றிய துவக்க உரை, த.வே.ப.கழகம், கோவை)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *