பனியில் காய்கறிகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்

பனிக்காலத்தில் காய்கறிகள் பாதிக்காமல் இருக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீசனுக்கேற்றவாறு காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இதனால் ஏற்படும் தட்டுபாட்டால் விலை உயர்கிறது. ஆண்டு முழுவதும் அனைத்து காய்களையும் சாகுபடி செய்ய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

  • பனிக்காலங்களில் தக்காளி, பீன்ஸ், பட்டாணி போன்றவை பாதிக்கப்படுகின்றன. இமாச்சலபிரதேசம் நானியில் உள்ள தோட்டக் கலை பல்கலையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ‘டிரேயில்’ காய்கறிகளின் விதைகளை ஊன்றி அவற்றை 2 அடி ஆழம் உள்ள குழிக்குள் வைக்க வேண்டும்.
  • 200 முதல் 250 மைக்ரான் எடையுள்ள பாலிதீன் பைகளால் மூட வேண்டும்.
  • இதன்மூலம் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.
  • இந்த தொழில்நுட்பம் குறித்து இமாச்சல பிரதேசத்தில் 13 மாநிலங்களை சேர்ந்த வேளாண்மை பல்கலை ஆராய்ச்சி மையங்களை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
  • காந்திகிராம பல்கலை வேளாண் ஆராய்ச்சி மைய தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் கூறியதாவது:’புதிய தொழில்நுட்பத்திற்கு அதிக செலவாகாது. இதனால் அனைத்து வகை காய்கறிகளும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் குறித்து மலைவாழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்,’ என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *