பாகல் சாகுபடி

பாகற்காய் சாகுபடி பொதுவாக விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிர்தான். வியாபார ரீதியாக சாகுபடி செய்வதற்கு நீட்டு பாகற்காய் மிக சிறந்ததாகும்.

  •  பாகல் சாகுபடிக்கு தண்ணீர் குறைவாக தேவைப்படுகிறது.
  • வேலை ஆட்கள் அதிகம் தேவை இல்லை.
  • களை குறைவான பயிர்.
  • அதிக செலவு செய்து பந்தல்போட்டு பாகல் சாகுபடியை விவசாயிகள் செய்கிறார்கள். இந்த பந்தல்களை ஐந்து முறைகள் சாகுபடி செய்வதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
  • செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் சாகுபடி செய்யலாம்.
  • பாகல் சாகுபடி செய்ய நல்ல புழுதி உழவும், தொழு உரமும் அவசியம் தேவை. ரசாயன உரங்கள் அதிகமாக உபயோகிக்கும் போது மகசூல் கூடுதலாகக் கிடைக்கும்.
  • காய்களின் பசுமைத் தன்மை மூன்று நாட்கள்தான் இருக்கும்.

ரகங்கள்:

  • சங்ரோ விவேக், செமினிஸ், அபிஷேக், நுண்கம்ஸ், அம்மன்ஜி, மஹிக்கோ, வென்சுரா, எம்ஏஎச்101, அங்கூர் பராக் போன்ற ரகங்கள் பாகல் சாகுபடி செய்வதற்கு ஏற்றது.
  • பாகல் வயது 160 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை ஆகும்.
  • விதை ஏக்கருக்கு 300 கிராம் தேவைப்படுகிறது.
  • விதைப்பதற்கு முன் 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தான் நடவுசெய்ய வேண்டும். ஏனெனில் இதன் சதைப்பற்று கடினமாக இருக்கும்.இதனால் விதை மேலேயே நின்றுவிடும்.
  • விதைகள் ஈரப்பதம் கிடைக்காமல் முளைப்புத்திறன் குறைய வாய்ப்பு உள்ளது. மேலே இருந்தால் எலிகள், அணில்கள் தோண்டி எடுத்து வீணாக்கிவிடும்.
  • இதைக் கருத்தில் கொண்டு சுமார் 30 மணி நேரம் ஊறவைத்த விதைகள் நடவு செய்யும்போது விதைகள் வீணாவது குறைவு
  • ஒரு விதை ஒரு ரூபாய் ஆகின்றது. இதனால் இந்த எளிய தொழில்நுட்பத்தை பின்பற்றினால்தான் பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.

நடவுமுறை:

  • பொதுவாக தனி பயிர்தான் பாகல் சாகுபடியில் உள்ளது. வரிசை முறையில் 7 அடி து 7 அடி இடைவெளிவிட்டு வாய்க்கால் அமைத்து அந்த கரை மீதுதான் விதை நடவு செய்வார்கள்.
  • தண்ணீர் வசதி மண்வளத்திற்கு ஏற்ப பாசனம் செய்ய வேண்டும். இதில் முன்னோடி விவசாயிகள் உளுந்தை வரிசையில் வாய்க்கால் வரப்பு ஓரங்களில் சாகுபடி செய்து 70 நாட்களில் 200 கிலோ வரை மகசூல் எடுத்து சாதனை படைத்த விவசாயிகள் உள்ளனர்.
  • இதில் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்யும் போது அசுவணி பூச்சி பாகலில் குறைவாக உள்ளது.  70 நாட்கள் உளுந்தை அறுவடை செய்தபின்னர்தான் பாகல் கொடிகள் பந்தலில் படர ஆரம்பிக்கும்.
  • அப்போது விவசாயிகளின் வசதியை ஒட்டி சவுக்கு மிலார் பந்தல், மூங்கில் பந்தல், நைலான் ஒயர் பந்தல், கல் நடவு செய்து சாகுபடி செய்வார்கள். மேற்கண்ட பந்தல்கள் சுமார் ஐந்து வருடங்கள் வரை உபயோகிக்கலாம்.

பயிர் பாதுகாப்பு:

  • இதில் பழ அழுகல் நோய்தான் அதிகம் காணப்படுகின்றது. இதற்கு கார்பன்டை ஆசிம் என்ற நோய் மருந்தை அவ்வப்போது உரிய பரிந்துரைப்படி மேற்கொண்டால் போதுமானது.
  • மற்றபடி பவர் தெளிப்பான் கொண்டு பூச்சிக்கொல்லிகளை கட்டுப்படுத்துவதற்கு பதில் குருணை பூச்சிக்கொல்லி மருந்துகளை திம்மெட் 10% கார்போ பியூரிடான் 3% போன்ற பூச்சிக்கொல்லிகளை ரசாயன உரங்கள் வைக்கும்போது சேர்த்து வைப்பதால் வேலை ஆட்களின் செலவை குறைக்கலாம்.
  • பவர் தெளிப்பானுக்கு தேவையான பெட்ரோல் செலவை குறைப்பதோடு வேர் வழியாக பூச்சிக்கொல்லிகள் செல்வதால் சீரான வளர்ச்சியுடன் செடிகள் வளருகின்றன.

காய்களின் நிறம், சந்தை நிலவரம்:

விற்பனையின்போது கிலோ ரூ.40 என்றால் நுகர்வோர்கள் கால் கிலோதான் வாங்க விரும்புவார்கள். ஆனால் ஒரு காயின் எடை 150 முதல் 200 கிராம் வரை இருக்கும். ரகங்களால்தான் விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கும். 250 கிராம் காய் வாங்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும்.
பாகல் சாகுபடி செலவு
உழவு, பார் அமைப்பு ரூ. 5,000.00
விதை, உரம், பயிர் பாதுகாப்பு ரூ. 5,000.00
நீர் நிர்வாகம், காவல், களை ரூ. 6,000.00
பந்தல்முறை, பிளாஸ்டிக் ரோப் ரூ. 15,000.00
அறுவடை + போக்குவரத்து (60 நாட்கள்)
ரூ.18,000.00
மொத்த செலவு ரூ. 49,000.00
உளுந்து ஊடுபயிர் சாகுபடி செய்து கூடுதல்
மகசூல் கிடைத்தால்
= 200 கிலோ து ரூ.50 வரவு ரூ. 10,000.00
பாகல் சாகுபடியில் 60 நாட்கள் அறுவடையில்
10 டன் மகசூல். விற்பனை விலை ரூ.10 என்று
கணக்கில் எடுத்துக்கொண்டால் 10 டன் து ரூ.10
ரூ.1,00,000.00
உளுந்து சாகுபடியில் கிடைத்த மகசூல் ரூ. 10,000.00
மொத்த வருமானம் ரூ. 1,10,000.00
பாகல் சாகுபடி மொத்த செலவு ரூ. 49,000.00
நிகர லாபம் ரூ. 61,000.00
பாகல் சாகுபடியில் கூடுதல் லாபம் கிடைக்க வழிகள்:

  • வீரிய ரகங்கள் அனைத்தும் பலாப்பழத்தில் எப்படி மேல்பகுதி முழுவதும் முள் போன்று உள்ளதோ அதுபோன்று முட்கள் பகுதி பாகலில் உள்ளது.
  • கோணியில் பேக்கிங் செய்து கோணியில் அடுக்கி அனுப்பும்போது இந்த முட்கள் போன்ற பகுதி உடையாதவண்ணம் அனுப்பினால்தான் பார்ப்பதற்கு காய்கள் பசுமையாக இருக்கும். இல்லையேல் தரம் இரண்டு என்று விலை குறைய வாய்ப்பு உள்ளது.
  • வேன்களில் செல்லும்போது மூடைகள் அதிக உயரம் அடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த கவனிப்பு நம்முடைய உற்பத்தி பொருள் கூடுதல் விலை கிடைப்பதற்கான வழிகளாகும்.

காய்கறி சாகுபடி வல்லுனர் ஆர்.பாண்டியன் (பெர்ட்டிலைசர் டிப்போ, 131-132, செஞ்சி ரோடு, திண்டிவனம்-604 001, 09842323075)
-எஸ்.எஸ்.நாகராஜன்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *