பனிக்காலங்களில் செம்மறி ஆடுகளை பாதுகாக்க வழிகள்

பனிக்காலங்களில் செம்மறி ஆடுகளுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்க  ஆட்டு பட்டி பராமரிப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு கருத்துக்களை விவசாயிகளுக்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
விவசாயம் மட்டுமல்லாமல் ஏராளமான விவசாயிகள் ஆடு வளர்த்து ஜீவனம் நட த்தி வருகின்றனர். தற்போது  மழையை தொடர்ந்து பனிக்காலம் தொடங்கியுள்ளது. பனி ஆரம்ப காலத்திலேயே அதிகமாக உள்ளது. இதனால் செம்மறி ஆடுகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பனிக்கால நோய்களிலிருந்து ஆடுகளை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது எவ்வாறு என்பது பற்றி கரூர் கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது:

  • பனி அதிகமான காலங்களில் செம்மறி ஆடுகளை பனிக்கால நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு ஆட்டுப்ப ட்டி பராமரிப்பு மிக முக்கியகும்.
  • பட்டி சரியாக அமைக்காவிட்டால் ஆடுகளுக்கு சளி, இருமல், வாய்ப்புண் நோய், புழு புண், குட்டிகளில் வளர்ச்சி குன்றுதல் காரணமாக ஆடுகள் இறந்து போக வாய்ப்புள்ளது. இதனல் ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும்.
  • இவற்றை தடுக்க ஆடுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டி தரம்புகள் விசாலமாக அமக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு ஆட்டுக்கு 4 சதுர அடி இடைவெளி விட வேண்டும்.
  • பட்டிக்கு மூன் றில் ஒரு பங்கு அளவு மட் டும் சாக்கு படுதா போடுதல் போதுமானது.
  • காலையில் பட்டிக்குள் இளம் வெயில் விழும்படி கிழக்குப் பகுதியில் வெற்றிடம் விட வேண்டும்.
  • தென்னந்தோப்பு, மாந்தோப்பு போன்ற ஈரப்பதமான இடங்களில் பட்டி அமைக்கக் கூடாது. மேடான இடத்தில் பட்டி அமைக்க வேண்டும்.
  • பட்டி தரம்புகளின் சுற்றுப்பகுதி, சாலை மற்றும் பெரிய ஆடுகளின் மீதும் 15 நாட்களுக்கு ஒரு முறை பியூடாக்ஸ் எனும் மருந்தை ஒரு லிட்டர் நீரில் ஒரு மில்லி கலந்து கை தெளி ப்பான் மூலம் தெளிப்பது நல்லது. இதனால் வாய்ப்புண் நோயை பரப்பும் பூச்சிக்கடி மற்றும் புற உண்ணிகளை தவிர்க்கலாம்.
  • மாலையில் வேம்பு, யூக்கலிப்டஸ், தும்பை மற்றும் இலை சருகுகள் கொண்டு பட்டிக்கு புகை போடலாம். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து ஆடு வளர்க்கும் விவசாயிகள் ஆடுகளை இந்த பனிக்கால நோய்களிலிருந்து பாதுகாத்து நஷ்டத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.

நன்றி: தினகரன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *