முறையான பால் கறக்கும் முறைகள்

  •  பொதுவாக கறவை மாடுகளில் பால் கறப்பதற்கு அனைத்து விரல்களையும் பயன்படுத்தி பால் கறத்தல், கட்டை விரலினை உட்புறமாக மடக்கி கறத்தல், கட்டை விரல், ஆள்காட்டி விரல்களை மட்டும் பயன்படுத்தி கறத்தல் ஆகியமுறைகளில் பால் கறக்கப்படுகிறது.
  • பிற முறைகளை ஒப்பிடும் போது அனைத்து விரல்களையும் பயன்படுத்தி கறக்கும்முறை மிகவும் சிறந்ததாகும். இம்முறையில் பால்காம்புகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
  • மடிநோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் இறுதியாக பால் கறப்பதின் மூலம் பிற கால்நடைகளுக்கு நோய் பரவுவதை தடுக்க முடியும்.
  • பால் கறவைக்கு முன்னால் கறவையாளர்கள் தங்கள் இரு கைகளையும் சோப்பு கொண்டோ அல்லது கிருமி நாசினி கலந்த தண்ணீர் கொண்டோ கழுவ வேண்டும்.
  • பால் கறவை இயந்திரங்களைப் பயன்படுத்துவோர் இயந்திர தயாரிப்பாளர்களின் பரிந்துரை செய்யும் தொழில்நுட்ப ஆலோசனைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
  • மடி நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பால்கறக்க கறவை இயந்திரங்களை பயன்படுத்தக்கூடாது.
  • இவ்வாறு பயன்படுத்தும் போது பாதிக்கப்பட்ட கால்நடைகளில் மடிகளில் வலி உண்டாவதுடன் பால் கறவை இயந்திரம் அசுத்தப்பட வாய்ப்புள்ளது.
  • கறவை மாடுகளில் தினசரி இரண்டு கறவைகளுக்கு இடையேயான இடைவெளி சமமாக இருக்க வேண்டும்.

பால்வற்றும் காலம்:

  • பால் வற்றும் காலம் என்பது சினையாக உள்ள பசுக்களில் எட்டுமாத காலத்தில் பால் கறவையை நிறுத்தி அடுத்த கன்று பிறக்கும் வரை ஓய்வளிப்பதாகும்.
  • சினைப்பசுக்களுக்கு ஓய்வளிப்பதால் பிறக்கப்போகும் கன்று ஆரோக்கியமாக வளர்வதுடன் அடுத்த கறவையில் பால் உற்பத்தி முறையாக இருக்கும்.
  • அதிக பால் கரக்கும் பசுக்களில் கறவையை நிறுத்தும் சமயத்தில் பால் கறவையை நிறுத்தக்கூடாது. இவ்வாறு நிறுத்துவதால் பால் மடியில் பாதிப்புகள் ஏற்படும்.
  • எனவே இத்தகைய பசுக்களில் பால் கறவையை படிப்படியாக நிறுத்த வேண்டும்.
  • முதலில் சில நாட்கள் ஒருசேர கறவையை நிறுத்தும் சமயத்தில் அவற்றிற்கான தீவனத்தினைச் சற்று குறைப்பதன் மூலம் பால் உற்பத்தியை குறைக்க முடியும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *