கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

மயிலம் பகுதியில் கேழ்வரகு சாகுபடி செய்ய விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • மயிலம் பகுதியில் இந்த ஆண்டு மழை குறைவாக பெய்ததால் ஏரி, குளங்களில் நீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் கிணறு, ஆழ் துளை கிணற்றில் நீர் மட்டம் குறைந்துள்ளது.
  • மயிலம், வீடூர், கணபதிப்பட்டு, ரெட்டணை, தீவனூர், கள்ளகொளத்தூர், செண்டூர் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் குறைந்த நீர் பாசனம் செய்யக்கூடிய கேழ்வரகு, எள், உளுந்து சாகுபடியை செய்ய துவங்கிவிட்டனர்.
  • விவசாயிகள் கேழ்வரகு விதைகளை தங்கள் நிலத்திலிருந்து தயார் செய்து கொள்கின்றனர்.
  • மார்கழி மாதத்தில் நெல் அறுவடை செய்தவுடன் கேழ்வரகு நாற்று விட்டு, புழுதி ஓட்டி, தொழுவுரம் அடித்து , பாத்திகள் தயார் செய்கின்றனர்.
  • நாற்று விட்ட 30ம் நாள் நடவு செய்கின்றனர்.
  • இந்த பட்டத்தில் நடும் கேழ்வரகு பயிரை பூச்சிகள் தாக்குவதில்லை.
  • நடவு செய்த 15ம் நாள் களை வெட்டிய பிறகு யூரியா தெளித்து விடுகின்றனர்.
  • பயிர் நன்றாக வளர்ந்து 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகும், ஒரு ஏக்கர் கேழ்வரகு சாகுபடி செய்தால் 10 மூட்டை வரையில் விளைச்சல் கிடைக்கிறது.
  • சர்க்கரை நோயாளிகள் உணவில் கேழ்வரகு சேர்த்துக் கொண்டால் உடலுக்கு நல்லது. வரும் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட @கழ்வரகு உணவுகளை சாப்பிட்டால் உடலுக்குநல்லது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *