ஒரே செடியில் 500 காய்கள் காய்க்கும் லக்னோ 49 கொய்யா

ஒரே செடியில் 500 காய்கள் காய்க்கும் “லக்னோ 49′ கொய்யாவை சாகுபடி செய்வதில் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

  • இந்த கொய்யா உத்திரபிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டது. எந்த காலத்திலும் சாகுபடி செய்யலாம்.
  • இவை 3 மாதத்தில் காய்க்க துவங்கும்.
  • ஆண்டு முழுவதும் காய்க்கும்.அதிகபட்சம் 3 அடி வளரும்.
  • ஒரே செடியில் ஆண்டிற்கு 500 காய்கள் காய்க்கும்.
  • ஒரு பழம் 750 கிராம் வரை இருக்கும்.
  • அடர்வு முறையில் ஒரு ஏக்கருக்கு 800 செடிகள் வரை நடலாம்.
  • ஏக்கருக்கு மூன்று லட்சம் கிலோ கிடைக்கும்.

அதிக லாபம் கிடைப்பதால் “லக்னோ 49′ கொய்யாக்களை சாகுபடி செய்வதில் திண்டுக்கல், பழநி, ரெட்டியார்சத்திரம், பலக்கனூத்து விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பலக்கனூத்து விவசாயி எம்.மனோஜ் கூறியதாவது:

பழம் சுவையாக இருக்கும். கிலோ ரூ.60 க்கு விற்கலாம். இதனால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் லாபம் கிடைக்கும். பராமரிப்பு செலவு குறைவு. கொய்யா கன்றுகளை ஒட்டு முறையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு தருகிறோம். ஒரு செடி ரூ.50 விற்கிறோம், என்றார்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

6 thoughts on “ஒரே செடியில் 500 காய்கள் காய்க்கும் லக்னோ 49 கொய்யா

  1. kumar says:

    கொய்யா பயிரிட வேண்டாம்

    நான் இரண்டு ஏக்கர் கொய்யா மரங்கள் வைத்திருந்தேன் இயற்கை முறையிலே பராமரித்து வந்தேன்.
    மாவுபூச்சி தாக்குதல்,
    வறட்சி தாங்காமல் கருகுதல்,
    குறைந்த விலை,
    சீக்கிரம் அழுகுதல்,
    காய்களில் கரும்புள்ளி
    என ஏகபட்ட பிரச்சனைகள்.அதனால் 1.5 ஏக்கரில் உள்ள மரத்தை அழித்து அதில் ரெட்லேடி பப்பாளி நடவு செய்தேன்.இப்போது பழம் அறுவடை நடக்கிறது அதிக லாபம் கிடைக்கிறது.

    • gttaagri says:

      Dear Sir,
      You can contact Horticultural College and Research Institute for Women, Trichy
      Horticultural College and Research Institute for Women, Trichy for the kandrus. The contacts are:
      Email : sohort@tnau.ac.in

      Phone No: 0431-2918033/2918034
      For more information – refer to Hindu

  2. s.sangarapandi says:

    I want lucknow-49 guava ,Arkka kiran saplings 50:50 for 1acra black soil land .kindly inform the availability of saplings and rate of the saplings .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *