கொய்யாவில் அடர் நடவில் அசத்தும் விவசாயிகள்

  • கொய்யா கன்றுகளை அடர் நடவு முறையில் கவாத்து செய்து, கூடுதல் மகசூல் பெறும் முயற்சியில் விழுப்புரம் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
  • ஏழைகளின் ஆப்பிள், வெப்ப மண்டலங்களின் ஆப்பிள் என கொய்யாப் பழம் அழைக்கப்படுகிறது. ஆண்டிற்கு இரு முறை காய்க்கும் தன்மை கொய்யாவிற்கு உண்டு. மா, வாழை, ஆரஞ்சு மற்றும் ஆப்பிளுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த பயிராக கொய்யா உள்ளது.
  • கொய்யாப் பழத்தில் மனிதர்களுக்கு தேவையான நார்சத்து அதிகம் உள்ளது.
  • பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் லைக்கோபின் ஆகியன மற்ற பழங்களை விட, இதில் அதிகம் உள்ளது.
  • இருப்பினும் மற்ற பழங்களை விட கொய்யாப் பழம் விழுப்பரம் மாவட்டத்தில் அதிகம் விளைவதால், குறைந்த விலையில் விற்கப்படுகிறது.
  • கொய்யாவின் முக்கியத்துவம் மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதால், பலரும் ஆர்வமாக வாங்கிச் சாப்பிடுகின்றனர்.
  • அடர் நடவுஇதனால் பழைய முறைப்படி கொய்யா சாகுபடி செய்த விவசாயிகள், பல புதிய முறைகளை கையாண்டு சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர்.
  • புதிய விவசாயிகள் பலரும் கொய்ய சாகுபடியில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
  • இதனால் பலர் பழைய முறைப்படி 6 மீட்டர் இடைவெளியில் கொய்யா கன்று நட்டு பராமரிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
  • மேலும் தற்போது அடர் நடவு முறையில், 3 மீட்டர் இடைவெளியில் கொய்யா கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்கின்றனர்.
  • இதனால் இரட்டிப்பு அளவு மகசூல் கிடைக்கிறது.
  • இரட்டிப்பு லாபம் அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்வதால் களையெடுத்தல், உரமிடுதல் போன்ற பணிக்கு ஆட்களின் தேவை குறைக்கப்படுகிறது.
  • வரிசைகளுக்கு இடையே ஊடு பயிராக மணிலா, உளுந்து மற்றும் காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன.
  • இதனால் கொய்யா மரங்கள் மூலமும், ஊடு பயிர்கள் மூலமும் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது.
  • ஆனால் பழைய முறைப்படி, வளர்ந்துள்ள கொய்யாச் செடிகளின் நுனிப் பகுதியை வளைத்து, அதில் மணல் பைகளை கட்டி, புதிய தளிர்களை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்.
  • இம்முறையில் புதிய தளிர்கள் குறைந்தளவே உருவாகின்றன. இதனால் செடிகளுக்கு உரமிடல், சூரிய வெளிச்சம் போன்றவை குறைவாகவே கிடைப்பதால், மகசூலும் குறைகிறது.
  • மேலும் பழைய முறையை கையாளும் வயல்களில் ஊடு பயிர்கள் செய்ய வாய்ப்புகள் இல்லை.
  • எனவே புதிய முறைப்படி அடர் நடவு முறையை மேற்கொண்டு, வளர்ந்த கிளைகளை வெட்டி விட வேண்டும்.
  • இதனால் பல இடங்களில் புதிய தளிர்கள் துளிர் விட்டு, அதிக பூக்கள் வைப்பதால், கூடுதல் மகசூல் கிடைக்கிறது. ஜனவரி அல்லது ஜூன் மாதங்களில் கவாத்து செய்வது நல்லது.
  • நடவு செய்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பராமரித்தால், மற்ற ஆண்டுகளில் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்பதால், அடர் நடவில் காவத்து செய்வதில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *