தினை பயிரில் திருப்தியான லாபம்!

தினை போட்டால் திருப்தியான லாபம் பெறலாம் எனக்கூறும் விவசாயி சுப்பிரமணியன்:

புதுவை விநாயகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். வழக்கமாக எங்கள் பகுதியில் நெல், கரும்பு போன்ற பயிர்களைத் தான் பயிரிடுவோம்.

இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் உயிரி கிராமத் திட்டத்தில், சிறு தானியங்களில் ஒன்றான தினைப் பயிரைப் பயிர் செய்யுமாறு அறிவுறுத்தினர்.

அது மட்டுமல்லாமல், சிறு தானியங்களைப் பயிர் செய்கிற பகுதிகளுக்கும் எங்களை அழைத்துச் சென்று, அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். தினை பயிரிடுவதற்கு தேவைப்படும் விதைகளையும், இலவசமாக எங்களுக்கு வழங்கினர். அதனடிப்படையில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த, 14 விவசாயிகள் குழுவாக இணைந்து, 15 ஏக்கர் பரப்பளவில் தினை சாகுபடி செய்தோம். நானும், ஒரு ஏக்கர் நிலத்தில் தினைப் பயிர் செய்து அதிக லாபம் ஈட்டினேன்.அவரின் டிப்ஸ்:

  • நிலத்தை நன்றாக உழுது, லேசான ஈரப்பதம் உள்ள நிலையில், தினை விதைகளை விதைக்க வேண்டும்.
  • மானாவாரியாக செய்ய வேண்டுமென்றால், மழைக்குப் பின் விதைக்க வேண்டும்.
  • ஒரு ஏக்கரில் பயிரிடுவதற்கு, 5 கிலோ விதைகள் தேவைப்படும்.
  • விதைத்த, 85 – 90 நாட்களுக்குள் தினைப் பயிர் அறுவடைக்குத் தயாராகி விடும்.
  • 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
  • தினைப் பயிரை நோய் தாக்காது என்பதால், பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்த வேண்டியதில்லை.
  • மானாவாரியாக பயிர் செய்தாலே போதும். துாறலும், பனிப்பொழிவும் உள்ள காலத்தில், பயிரிட்டு லாபம் பெறலாம்.
  • விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து செலவுகளையும் சேர்த்து, 5,000 ரூபாய் செலவு செய்துள்ளேன். ஒரு ஏக்கரிலிருந்து, 1,000 கிலோ தினையை அறுவடை செய்திருந்தேன்.
  • அது மட்டுமல்லாது, 100 கிலோ அடங்கிய ஒரு மூட்டை விலை, 2,700 ரூபாய் வீதம், 10 மூட்டைகளை விற்பனை செய்ததன் மூலம், 27 ஆயிரம் ரூபாய் பெற்றேன்; 22 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டினேன். குறுகிய காலப் பயிர் மற்றும் செலவும் குறைவு என்பதால், குறு விவசாயிகள் பயிர் செய்து லாபம் பெறலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *