மானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள்

குறைந்து வரும் கம்பு சாகுபடியை அதிகரிக்க மானாவாரி கம்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து திருநாவலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இரவீந்திரன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • மானாவாரி பருவ விதைப்புக்கு முன்பு கோடை உழவு மிகவும் சிறந்தது.
  • கோடை உழவின்போது நிலம் முழுவதும் சரிசமமாக இருக்கும்படி ஒரு ஏக்கருக்கு 5000 கிலோ வீதம் பண்ணை எருவினை தூவி, உழவு செய்வதால் ஒரு ஏக்கருக்கு 16 கிலோ தழைச்சத்து, 8 கிலோ மணிச்சத்து, 5 கிலோ நுண்ணுரம், 8 பாக்கெட் நுண்ணுயிர் போன்றவற்றை அடியுரமாக இடலாம்.
  • ஐசிஎம்வி 221, ஐசிஎம்வி 155 போன்ற ரகங்களையோ, தனியார் வீரிய ஒட்டு ரகங்களையோ ஒரு ஏக்கருக்கு 2 கிலோ வீதம் விதைப்பு செய்தால் போதுமானது.
  • விதைப்புக்கு முன்பு 10 லிட்டர் நீரில் 1 கிலோ சாதா உப்பினை கரைத்து, அந்த உப்புக்கரைசலில் கம்பு விதைகளை ஊற வைக்கவும்.
  • இப்படி செய்யும்போது நோய் தாக்கப்பட்ட கம்பு விதைகள் மேலே மிதக்கும்.
  • பின்னர் மிதக்கின்ற விதைகளை நீக்கிவிட்டு, இதர தரமான விதைகளை சுத்தமாக நீரில் இரண்டு அல்லது மூன்று தடவை கழுவி, நிழலில் உலர்த்தி விதைப்பு செய்யலாம்.
  • மேலும் 2 சத பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 சத சோடியம் குளோரைடு கரைசலில் 16 மணி நேரம் கம்பு விதைகளை ஊற வைத்து, அதன் பின்பு 5 மணி நேரம் நிழலில் உலர்த்தி கம்பு விதைகளை விதைப்பு செய்யும்போது முளைப்புத்திறன் அதிகரிக்கிறது.
  • கம்பு விதைகளை மானாவாரியாக விதைக்கும்போது 45 செ.மீ. மற்றும் 15 செ.மீ. இடைவெளி இருக்கும்படி விதைப்பு செய்வது நல்லது.
  • மேலும் காலத்தே களையெடுத்து, அதிகப்படியாக செடிகள் முளைத்திருந்தால், அவற்றை சரியான இடைவெளி விட்டு நீக்கிவிட வேண்டும்.
  • இப்படி செய்யும்போது பக்கவாட்டில் கிளைகள் ஏற்பட்டு, அதிக மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த தேவை ஏற்படும்போது வேம்பு கலந்த பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *