வறட்சிக்கு தாக்கு பிடிக்கும் குதிரை வாரி சாகுபடி

வறட்சி யை தாங்கி வளரும் குதிரை வாரி சாகுபடியை மேற்கொண்டால் அதிக மகசூல், லாபம் பெறலாம் என்று அன்னவாசல் வேளாண் உதவி இயக்குநர் சிங்காரம் பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி குதிரைவாரி விதைத்தால் அதிக மகசூல் மற்றும் லாபம் பெறலாம்.
  • பொதுவாக குதிரைவாரி பயிரானது வறட்சி, மண் உவர்ப்பு ஆகியவற்றைத் தாங்கி வளரக்கூடிய மானாவாரி சிறுதானியப் பயிராகும்.
  • நிலத்தை 2 முறை கலப்பையை கொண்டு உழுது சமப்படுத்தி விதைப்படுக்கையை தயார்படுத்த  வேண்டும்.
  • கோ (கேவி) 2 என்ற ரக விதைகள் எக்டருக்கு 12.5 கிலோ வீதம் வரிசைக்கு வரிசை 22 செ.மீ இடைவெளியும், செடிக்குச் செடி 10 செ.மீ இடைவெளி யும் இருக்குமாறு விதைக்க வேண்டும்.
  • பொதுவாக குதிரை வாலிக்கு நீர்ப் பாசனம் தேவையில்லை.
  • வறண்ட சூழ்நிலை நிலவினால் ஒரு முறை நீர்ப்பாசனம் பூங் கொத்து வரும் தருனத்தில் அளிக்க வேண்டும் ஒரு எக்டேர் நிலத்தில் 5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின் போது பரப்பி பின்னர் உழவுச் செய்ய வேண்டும்.
  • ஒரு எக்டேருக்கு பொதுப் பரிந்துரைப்படி 44:22 கிலோ தழைச்சத்து மற்றும் மணிச்சத்து முறையே யூரியா 96 கிலோவும் சூப்பர் பாஸ்பேட் 138 கிலோவும் இடவேண்டும்.வரிசை விதைப்பு செய்திருந்தால் 23 முறை இடை உழவுச் செய்யவும்  ஒரு முறை கையால் களை எடுத்தால் போதுமானது.
  • இப்பயிரை எந்தவகை பூச்சி மற்றும் பூஞ்சாணமும் அதிகமாக தாக்குவதில்லை.
  • கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும்.
  • தானியங்களை பிரித்த பின் உள்ள தட்டையையும் நன்கு உலர்த்தி சேமித்து வைத்தால் ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம்.
  • 95 நாள் வயதுடைய இந்த கோ (கேவி)2 ரகம் மூலம் எக்டேருக்கு 2650 கிலோ வரை அதிக மகசூல் பெறலாம்.
  • இந்த ரக விதைகள் அன்னவாசல் வேளாண் விரிவாக்க மையத்தில் போதுமான அளவுக்கு இருப்பில் உள்ளதால், இவற்றை பயன்படுத்தி  விவசாயிகள் பயன்பெற வேண்டும்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வறட்சிக்கு தாக்கு பிடிக்கும் குதிரை வாரி சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *