சிறுதானிய மதிப்பூட்டும் இயந்திரங்கள்

சிறுதானியங்களை அறுவடை செய்தவுடன் அதிலுள்ள சிறு சிறு கற்கள், மண்களை அகற்றுவது மிகவும் அவசியம். இதற்காக பல புதிய கருவிகளை கண்டுபிடித்துள்ளார்கள்.
சிறுதானிய உமி நீக்கி இயந்திரம்:

சுத்தம் செய்த சிறு தானியத்தை அப்படியே உணவுக்கு பயன்படுத்த முடியாது. இந்த புதிய கருவியைக் கொண்டு சிறுதானியத்தில் உள்ள உமியை நீக்கி சுத்தமான சிறுதானிய அரிசியைப் பெறலாம்.
சிறுதானியத்தில் உள்ள கல், மண் ஆகியவற்றை அகற்றுவதற்கான புதிய கருவியை வெளியிட்டுள்ளார்கள். இதில் அறுவடை செய்த தானியத்தை கொட்டினால் இயந்திரம் மூலம் தானியத்தில் உள்ள சிறு கற்கள், குருணைகள், மண் தூள்கள் ஆகியவற்றை அகற்றி விட்டு சுத்தமான சிறுதானியத்தைப் பெறலாம்.
சிறுதானிய மாவு அரைக்கும் இயந்திரம்:

சிறுதானிய அரிசியிலிருந்து சிறுதானிய சத்துமாவு தோசை மாவு, லட்டு போன்றவற்றை தயாரிக்க சிறுதானிய அரிசியை அரைக்க வேண்டும். இதற்கு சாதாரண அரைக்கும் இயந்திரமும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறுதானிய கருவிகளை ஒரு யூனிட்டில் பொது இடங்களில் பொருத்தி இளைஞர்களை இதை ஒரு சுயவேலைவாய்ப்பாக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்பு உள்ளது.
இதற்காக அனைத்து வேளாண் அறிவியல் நிலையங்களிலும் இயந்திர செயல்விளக்க திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தகவல் : முனைவர் நா.ஸ்ரீராம், முனைவர் கு.மகேந்திர குமார், வேளாண்மை அறிவியல் நிலையம், அந்தியூர், சேலம்-636 204. தொலைபேசி : 04242422550.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *