எம்.எஸ்.சுவாமிநாதனும் பசுமை புரட்சியும்

எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள 90 வயதிலும் விவசாயத்தில் ஊக்கத்துடன் ஈடுபாடோடு இருப்பதை பற்றி  எழுதியிருந்தோம்.அதற்கு பதிலாக சிலர்  அவரின் பசுமை புரட்சியை பற்றியும் அதனால் விளைந்த கேடுகளை பற்றியும் குறை கூறி எழுதி இருந்தனர்.

இதை பற்றி நாம் கருத்து சொல்வதற்கு முன் 1960 களில் இந்தியா எப்படி இருந்தது என்பதை  நினைவு கூற  வேண்டும்

நம்முடைய உற்பத்தியும் தேவைக்கும் இடையே பெரிய  இடைவெளி. வெளி நாடுகளில் இருந்து கப்பல் மூலம் அரிசியும் கோதுமையும் இறக்குமதி. அமெரிக்கா நன்மை செய்கிறேன் உதவுகிறேன் PL480 என்ற திட்டம் மூலம் அவர்களுக்கு உபரி ஆக இருக்கும் தானியங்களை இங்கு கப்பல் மூலம்  அனுப்பினர்.நாம் அவர்கள் மீது முழுமையாக சார்ந்து  நாட்டின் சுதந்திரத்தை இழக்கும் நிலைக்கு வந்தோம்.

PL480 பற்றிய ஒரு பழைய கார்டூன் Courtesy: Swarajamag.com
PL480 பற்றிய ஒரு பழைய கார்டூன் Courtesy: Swarajamag.com

அப்போது மத்தியில் அமைச்சர் ஆக இருந்த சுப்ரமணியமும்  எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களும் உலகத்தில் அதிகம் மகசூல் தரும் தானிய விதைகளை இந்தியாவிற்கு எடுத்து வந்து வளர்த்து விவசாயிகளிடையே பரப்பி 10 ஆண்டுகளில் நம் நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு வரும் நிலைக்கு கொண்டு  வந்தனர்.இதற்கு 2 தமிழர்கள் காரணம் என்பது நாம் பெருமையுடன் சொல்லி கொள்ள வேண்டிய விஷயம்.
அப்போது இருந்த சூழ்நிலையில் அவர்களுக்கு தெரிந்த வழிகளில் அப்போது இருந்த தொழிர்நுட்பதை பரப்பி பஞ்ச நிலையை மாற்றியதை இப்போது குறை சொல்ல முடியாது

அதிக  உரம் இடுவது ,அளவுக்கு அதிகமாக ரசாயன பூச்சி  மருந்து இடுவது  ஒரே பயிரை திருப்பி திருப்பி இடுவது போன்ற சில நடைமுறைகளால் மண் வளம் கெட்டு மகசூல் குறைந்தது நாமே நமக்கு செய்து கொண்ட கோளாறு. பின் விளைவுகளை அறியாமல் செய்த தவறு.

எதுவும் அளவுக்கு மீறி செய்தால் பின்விளைவுகள் இருக்க தான் செய்யும்.

இதற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களை குறை கூறுதல் தவறு

இனி எப்படி பசுமை புரட்சிக்கு முன் இருந்த பாரம்பரிய விவசாய வழிமுறைகளையும் புதிய வழிகளையும் சேர்த்து sustainable நிலையான நஷ்டம் இல்லாத விவசாயம் உண்டாக வேண்டும்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “எம்.எஸ்.சுவாமிநாதனும் பசுமை புரட்சியும்

  1. shanker says:

    1960 famine was caused due to the tricks done by landlords against the landbill introduced then. Lakhs of hectares were left barren wantedly. Until those lands were completely transfered to their binami names.. Green revolution is a disgrace to humanity..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *