பருத்தி, மக்காச்சோளத்தில் கூடுதல் லாபம் பெற டிப்ஸ்

பருத்தி, மக்காச்சோளத்தில் அதிக லாபம் பெற விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  • பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம் அறுவடை நடைபெறுவதைத் தொடர்ந்து, பெரம்பலூர் – வடக்குமாதவி சாலையில் காந்திநகரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம்தோறும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பருத்தி, மக்காச்சோளம் ஏலம் நடைபெறுகிறது. வெளி மாவட்டங்களிலிருந்து வியாபாரிகளை வரவழைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • எனவே, விவசாயிகள் அதிகளவில் பருத்தி மற்றும் மக்காச்சோள விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டுவர வேண்டும்.
  • விவசாயிகளால் கொண்டுவரப்படும் விளைபொருள் ஈரப்பதமாக இருந்தால், அதன் விலை குறைவதோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைக்க நேரும்பட்சத்தில் ஈரப்பதம் காரணமாக பருத்தி நிறம் மாறும்.இதனால், மக்காச்சோளத்தில் பூஞ்சானம் வளர வாய்ப்புள்ளது. தரமும், விலையும் குறையும்.
  • பருத்தி அறுவடை செய்யும்போது வயல் அளவிலேயே தரமான, சுத்தமான வெண்மையான பருத்தியை தனி கூடையிலும், நிறம் மாறிய தரம்குறைந்த பருத்தியை வேறு ஒரு கூடையிலும் தனித்தனியாக தரம்பிரித்து சேகரிக்க வேண்டும்.
  • அறுவடை செய்யப்பட்ட பருத்தியை நிழலில் சாக்குகள் மீது பரப்பி 2 முதல் 3 நாள்கள் உலர்த்த வேண்டும்.
  • பருத்தியை நேரடி சூரிய வெயிலில் காயவைக்கக்கூடாது.
  • மக்காச்சோளத்தை நேரடி சூரிய வெயிலில் 3 முதல் 4 நாள்கள் உலர்த்த வேண்டும்.
  • இவ்வாறு, நன்கு உலரவைக்கப்பட்ட பருத்தி மற்றும் மக்காச்சோள விளைபொருளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டுவர வேண்டும்.
  • இதன்மூலம் கூடுதல் விலை பெற்று பயன்பெறலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *