துவரை நடவு முறை

தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட வீரணம், வானாபுரம், மேல்முத்தானூர் ஆகிய கிராமங்களில் வேளாண்மைத்துறை சார்பாக துவரை நடவு முறை  விவசாயிகளுக்கான பயிற்சி திருவண்ணாமலை மாவட்ட துணை வேளாண்மை (மத்தியதிட்டம்) இயக்குநர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.

தண்டராம்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அ.பாலா, வேளாண்மை அலுவலர் நடராஜன், துணை வேளாண்மை அலுவலர் அன்பழகன் ஆகியோர் கூறியதாவது:

  • துவரை சாகுபடியில் விதை கடினப்படுத்துதல் நேர்த்தி, தாவர பூஞ்சான் விதைநேர்த்தி, உயிர் உரநேர்த்தி, பாலித்தீன் பையைக் கொண்டு மண், மணல், தொழுஉரம் ஆகியவற்றை சமபங்குகள் கலந்து நிரம்பி 1 பைக்கு 2 விதைகள் வீதம் ஊன்றி தண்ணீர் தெளித்து 25 முதல் 30 நாள்கள் வரை வளர்க்க வேண்டும்.
  • 5 க்கு 3 இடைவெளியில் நடவு செய்து 1 மாதத்தில் நுனியை கிள்ளிவிட வேண்டும்.
  • பின்பு 35 மற்றும் 50 ம் நாளில் 2 சதவிகிதம் டிஏபி மற்றும் 1 சதவிகிதம் பொட்டாஷ் கரைசலை செடிகள் மீது தெளிக்க வேண்டும்.

இவ்வாறு தொழில் நுட்பங்களை கடைபிடித்து அதிக விளைச்சலை விவசாயிகள் பெறுவதற்கான பல்வேறு வழிமுறைகளை கூறினர்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *