இளநீர் உற்பத்தியை அதிகரிக்க தென்னையில் குட்டை ரகம்

“”தமிழகத்தில் முதல்முறையாக இளநீர் உற்பத்தியை அதிகரிக்க, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில் குட்டை ரகத்தை கண்டுபிடித்துள்ளதாக,” அதன் தலைவர் ராஜாமாணிக்கம் தெரிவித்தார்.

  • தென்னை ஆராய்ச்சி நிலையம் சார்பில் புதிதாக தென்னையில் மூன்று ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இதில், அரசம்பட்டி, டிப்பூர் ஆகியவை நெட்டை ரகங்களாகவும், கெந்தாலி என்பது குட்டை ரகமாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில், முதல் முறையாக குட்டை ரக இளநீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மேற்கு மண்டல பகுதிகளுக்காக, ஆண்டில் மூன்று பருவ காலத்தில் ஒரு நாளுக்கு எத்தனை முறை சொட்டு நீர் பாசனத்தை செயல்படுத்த வேண்டும் என்ற ஆராய்ச்சி மேற்கொண்டது.
  • இதில், மழை காலத்தில், 45 லிட்டரும், குளிர் மற்றும் பனி காலத்தில் 55 லிட்டரும், வெயில் காலத்தில் 65 லிட்டரும் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த முறையில் பயன்படுத்தினால், 100 முதல் 150 காய் வரை பெறலாம்.
  • சொட்டு நீரில் உரம் கலந்து செலுத்தும் முறையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • தென்னையில், ஊடுபயிர்கள் பயிரிட்டால் கூடுதல் லாபம் ஈட்டலாம்.
  • இதில், 16 வகையான ஊடுபயிர்களை பயிரிடலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
  • முதல்வகையாக, ஜாதிக்காயை பயன்படுத்தலாம்.கோ- கோ, வாழை ஆகியவையும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
  • ஊடுபயிர்களின் வகைகளை பொறுத்து கூடுதலாக ஒரு லட்சம் முதல் 1.15 லட்சம் ரூபாய் வரை கூடுதல் வருமானம் ஈட்டலாம்.
  • இவற்றில் இருந்து கிடைக்கும் இலைகளை தென்னை மரங்களுக்கு உரமாக பயன்படுத்தினால், 20 முதல் 30 சதவீதம் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
  • தற்போது, குறும்பை விழும் பிரச்னை அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க, ஆராய்ச்சி நிலையம் சார்பில் “டானிக்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், ஊட்டசத்து கிடைக்கும்.
  • காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண் வண்டு, சாறு உறிஞ்சும் பூச்சி ஆகியவற்றை கட்டுபடுத்த ஒருங்கிணைந்த பூச்சி கட்டுபாட்டு முறைகள் பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.
  • தென்னையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், தென்னையை தேர்வு செய்தல் உள்ளிட்ட குறித்து சான்றிதழ் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்கு 1,500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் கொண்டு, தென்னை வளர்ச்சி வாரியத்தில் இருந்து 30 சதவீதம் மானியமாக கிடைக்கும்.

இது குறித்த விபரங்களுக்கு, தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளை அணுகலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “இளநீர் உற்பத்தியை அதிகரிக்க தென்னையில் குட்டை ரகம்

  1. வெங்கட் says:

    அன்புடையீர்,

    வணக்கம். தென்னை குட்டை ரகம் எங்கு கிடைக்கும் என்று கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்

    அன்புடன் வெங்கட்
    9865824794
    msv6000@yahoo.com

    • gttaagri says:

      திரு வெங்கட்,

      தென்னை ஆராய்ச்சி நிலையம்,ஆழியார்நகர், ஆழியார் அணை, பொள்ளாச்சி…. Phone :04253288722

      என்ற இடத்தில தரமான தென்னை கன்றுகள் கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *